குமாரபாளையத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Jan 2018 3:45 AM IST (Updated: 28 Jan 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து வெளியிட்ட கருத்திற்கு எதிராக சிலர் வைரமுத்துவை திட்டுவதை கண்டிக்கும் வகையிலும், வைரமுத்துவிற்கு ஆதரவாகவும் குமாரபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

குமாரபாளையம்,

கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து வெளியிட்ட கருத்திற்கு எதிராக சிலர் வைரமுத்துவை திட்டுவதை கண்டிக்கும் வகையிலும், வைரமுத்துவிற்கு ஆதரவாகவும் குமாரபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

குமாரபாளையத்தில் உள்ள பள்ளிபாளையம் பிரிவு ரோட்டில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நா.ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் நகர தி.மு.க. செயலாளர் வெங்கடேசன், பேச்சாளர் ஆறுமுகம், ம.தி.மு.க. நகர செயலாளர் விஸ்வநாதன், வக்கீல் கார்த்தி, பொன்னையன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story