ரெயிலில் வந்த சர்க்கரை மூட்டைகளை இறக்குவதில் 2 தொழிற்சங்கத்தினரிடையே மோதல்
ரெயிலில் வந்த சர்க்கரை மூட்டைகளை இறக்குவதில் 2 தொழிற்சங்கத்தினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி,
வெளி மாநிலங்களில் இருந்து அரிசி, கோதுமை, உரம், சிமெண்ட், சர்க்கரை ஆகிய பொருட்கள் சரக்கு ரெயில்கள் மூலம் திருச்சி குட்ஷெட்டிக்கு கொண்டு வரப்படும். அவற்றை தொழிலாளர்கள் மூலம் இறக்கி லாரிகளில் ஏற்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இங்கு வரும் சரக்குகளை இறக்கி லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கும் பணியில் அண்ணா தொழிற்சங்கம் மற்றும் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு ரெயில்களில் வரும் சரக்குகள் எதுவாக இருந்தாலும் இரண்டு தொழிற்சங்கத்தினரும் சரி பாதியாக பிரித்து லாரிகளில் ஏற்றும் பணியை கடந்த பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கர்நாடகாவில் இருந்து நேற்று காலை 2,600 டன் சர்க்கரை மூட்டைகளுடன் சரக்கு ரெயில் திருச்சி குட்ஷெட்டிற்கு வந்தது. இந்த சர்க்கரை மூட்டைகளை லாரிகளில் ஏற்றி பெட்டவாய்த்தலையில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பும் பணியில் நேற்று அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் மட்டும் ஈடுபட்டதாக தெரிகிறது.
அதற்கு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் அனுமதிக்கவில்லை. இதற்கு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது 2 தொழிற்சங்கத்தினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த சிலர் குட்ஷெட் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் லாரிகள் வெளியில் செல்ல முடியவில்லை. அதே போன்று வெளியில் இருந்து லாரிகள் உள்ளேயும் செல்ல முடியவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி ரெயில்வே போலீசார் மற்றும், பாலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது குட்ஷெட்டிக்கு வரும் சரக்குகளை ஏற்கனவே 2 தொழிற்சங்கத்தினரும் எவ்வாறு சரி பாதியாக பிரித்து லாரியில் ஏற்றும் தொழிலில் ஈடுபட்டீர்களோ அதே போன்று பணிகள் தொடர வேண்டும் என்று பேசி முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் மறியலை கைவிட்டனர். அதன்பிறகு இரண்டு தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களும் லாரிகளில் சர்க்கரை மூட்டைகளை ஏற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் நேற்று காலை 6 மணி முதல் 11 மணி வரை குட்ஷெட் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Related Tags :
Next Story