பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்


பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Jan 2018 4:30 AM IST (Updated: 28 Jan 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்விற்கு கண்டனம் தெரிவித்தும், பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தி.மு.க. மாநில மகளிர் அணி தலைவி காஞ்சனா கமலநாதன், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன், முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தி.மு.க. செயலாளர் நவாப் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தின் போது பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கனியமுதன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மாதையன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஜாபர், மனித நேய மக்கள் கட்சி நூர்முகமது, இந்திய கம்யூஸ்டு கட்சி நிர்வாகி சிவராஜ், திராவிடர் கழக நகர தலைவர் மாதப்பன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

இதில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அமீன், தலைமை செயற்குழு உறுப்பினர் பொன்.குணசேகரன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தி.மு.க. மத்தூர் மாணவர் அணி துணை அமைப்பாளர் துரை.ராமமூர்த்தி, பர்கூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன், காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர்கள் நாஞ்சில் ஜேசு, நாராயணமூர்த்தி, நகர தலைவர் ரகமத்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story