பஸ் கட்டண உயர்வை கண்டித்து சேலம் மத்திய மாவட்ட தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
பஸ் கட்டண உயர்வை கண்டித்து சேலம் மத்திய மாவட்ட தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாளை 3 இடங்களில் சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
சேலம்,
தமிழகத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியதாக கூறி அதை கண்டித்தும், அந்த கட்டண உயர்வை திரும்ப பெற்று மீண்டும் பழைய நிலையிலேயே கட்டணம் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ஆர்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அவைத்தலைவர் எஸ்.டி.கலையமுதன், பொருளாளர் ஜி.கே.சுபாசு, மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர்கள் டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர செயலாளர் ஜெயக்குமார் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை பொதுச்செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வி.பி.துரைசாமி, திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் பஸ் கட்டணத்தை உயர்த்தியதே இல்லை. இன்றைய ஆட்சியாளரும், அமைச்சர்களும் பினாமி பெயரில் தனியார் பஸ்களை விலைக்கு வாங்கியதன் விளைவாக, அரசு போக்குவரத்து துறையை வியாபார பொருளாக்கி விண்ணை முட்டுகிற அளவில் பஸ் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள். இதனை கண்டிக்கிற வகையில் அடுத்த கட்டமாக நாளை(திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு எனது தலைமையில் சேலம் புதிய பஸ் நிலையம் அருகிலும், மாநகர செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் சேலம் பழைய பஸ் நிலையம் அருகிலும், ஓமலூர் பஸ் நிலையம் அருகில் மாவட்ட துணை செயலாளர் திருநாவுக்கரசு தலைமையிலும் சாலைமறியல் போராட்டம் நடக்கிறது. அ.தி.மு.க. அரசை தட்டிக்கேட்கிற இந்த போராட்டத்தில் தி.மு.க.வின் அனைத்து அணி நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாநில தீர்மானக்குழு உறுப்பினர் தாமரைக்கண்ணன், மாவட்ட கலை இலக்கிய அணி அமைப்பாளர் முத்து கலைமாமணி, துணை செயலாளர்கள் ரெகுபதி, முன்னாள் மேயர் சூடாமணி, மகளிர் அணியை சேர்ந்த சங்கீதாநீதிவர்மன், வடக்கு ஒன்றிய செயலாளர் ரெயின்போ நடராஜன், மற்றும் நிர்வாகிகள் கே.டி.மணி, அண்ணாமலை, பச்சியப்பன், கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story