பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்


பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Jan 2018 4:54 AM IST (Updated: 28 Jan 2018 4:54 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று எடப்பாடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சேலம்,

தமிழகத்தில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பஸ் கட்டண உயர்வை கண்டித்து சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி சார்பில் எடப்பாடி பஸ் நிலையம் எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

எடப்பாடி நகர தி.மு.க. செயலாளர் பாஷா வரவேற்று பேசினார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகன், மாவட்ட பொதுச்செயலாளர் குணசேகரன், எடப்பாடி நகர காங்கிரஸ் தலைவர் நாகராஜன், ம.தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் மகேந்திரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரைஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஜீவா, தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் கோபால், நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், மாநில செயற்குழு உறுப்பினர் பி.ஏ.முருகேசன், மாவட்ட துணை செயலாளர்கள் சுந்தரம், சம்பத் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழக அரசு பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும், கட்டண உயர்வை கண்டித்து கண்டன கோஷங்களையும் எழுப்பினார்கள்.

Next Story