மராட்டியத்தை சேர்ந்த 11 பேருக்கு பத்ம விருது
கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதிப்பவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஆண்டு தோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.
மும்பை,
இந்த ஆண்டு 85 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மராட்டியத்தில் 11 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், மும்பையை சேர்ந்த கர்நாடக இசை பாடகர் குலாம் முஸ்தபா கானுக்கு நாட்டின் 2–வது பெரிய விருதான பத்மவிபூஷண் வழங்கப்படுகிறது. சித்தார் இசைக்கலைஞர் அரவிந்த் பாரிக் பத்மபூஷண் விருது பெறுகிறார்.
இதுதவிர அபய்பங், ராணி பங், அரவிந்த்குப்தா, நடிகர் மனோஜ் ஜோஷி, தொழில் அதிபர் ரமேஷ்வர்லால் கர்பா, நடிகர் சிசிர் புருஷோத்தம் மிஸ்ரா, நீச்சல் வீரர் முரளிகாந்த் பெட்டேக்கர், எழுத்தாளர் பனாட்வானே கங்காதர், மறைந்த சமூகசேவகர் சம்பத் ராம்தேகே ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story