அரபிக்கடலில் ‘சத்ரபதி சிவாஜி நினைவிட பணியை உடனே தொடங்குங்கள்’


அரபிக்கடலில் ‘சத்ரபதி சிவாஜி நினைவிட பணியை உடனே தொடங்குங்கள்’
x
தினத்தந்தி 28 Jan 2018 5:08 AM IST (Updated: 28 Jan 2018 5:08 AM IST)
t-max-icont-min-icon

அரபிக்கடலில் ‘சத்ரபதி சிவாஜி நினைவிட பணியை உடனே தொடங்குங்கள்’ என்று உயர்மட்ட குழுவுக்கு முதல்-மந்திரி பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

மும்பை,

மும்பை அரபிக்கடலில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜிக்கு 192 அடி உயர சிலையுடன், ரூ.3 ஆயிரத்து 600 கோடியில் பிரமாண்டமாக நினைவிடம் அமைக்க மராட்டிய அரசு முடிவு செய்தது. இந்த நினைவிடத்திற்கு கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் இதுவரை நினைவிடம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கவில்லை.

இந்த நிலையில் நேற்று சத்ரபதி சிவாஜி நினைவிடம் தொடர்பான உயர்மட்ட குழு கூட்டம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் நடந்தது. அப்போது சத்ரபதி சிவாஜிக்கு நினைவிடம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்குமாறு அவர் உயர்மட்ட குழு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Next Story