கோபியில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கோபியில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Jan 2018 5:28 AM IST (Updated: 28 Jan 2018 5:28 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை கண்டித்து கோபியில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கடத்தூர்,

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கோபி பஸ் நிலையத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சரவணன், தி.மு.க. நகரச் செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் முருகன், லக்கம்பட்டி பேரூராட்சி செயலாளர் நாராயணசாமி, ம.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் மா.கந்தசாமி மற்றும் விடுதலை சிறுத்தை, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். 

Next Story