அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு “மகதாயி நதிநீர் பிரச்சினையில் பிரதமர் தலையிட வேண்டும்”
மகதாயி நதிநீர் பிரச்சினை குறித்து முதல்-மந்திரி சித்தராமையா தலைமை யில் பெங்களூருவில் நேற்று கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.
பெங்களூரு,
மகதாயி நதிநீர் பிரச்சினையில் பிரதமர் தலையிட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகம், கோவா, மராட்டியம் ஆகிய 3 மாநிலங்களுக்கும் இடையே மகதாயி நதிநீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த பிரச்சினை குறித்து விசாரிக்க நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. தற்போது நடுவர் மன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 3 மாநிலங்களும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமுக தீர்வுகாணும்படி சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் மகதாயி நதிநீர் பிரச்சினையில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என்று விவசாய சங்கங்களும், காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளும், கன்னட அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. மகதாயி நதிநீர் பிரச்சினையில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என்று கோரி கடந்த 25-ந் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அத்துடன் இதே கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் (பிப்ரவரி) 4-ந் தேதி பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில், மகதாயி நதிநீர் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதானசவுதாவில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி சதானந்தகவுடா, எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் ஈசுவரப்பா உள்ளிட்டோரும், ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர். மேலும் மந்திரிகள் எம்.பி. பட்டீல், டி.பி.ஜெயச்சந்திரா, உமாஸ்ரீ, விவசாயிகள் சங்க தலைவர் வீரேஷ், விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் மகதாயி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கட்சி தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அப்போது பேசிய மந்திரி எம்.பி.பட்டீலும், ஜனதா தளம்(எஸ்) கட்சியினரும் மகதாயி நதிநீர் பிரச்சினையில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு 3 மாநில முதல்-மந்திரிகளை அழைத்து பேச வேண்டும் என்று கூறினார்கள்.
இதே கருத்தை விவசாயிகள் சங்க தலைவர் வீரேசும் தெரிவித்தார். இதற்கு ஜெகதீஷ் ஷெட்டரும், ஈசுவரப்பாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மகதாயி நதிநீர் பிரச்சினையில் ராகுல்காந்தி தலையிட்டு உள்ளாரா? அவர் கருத்து சொல்லாமல் இருப்பது ஏன்? என்று குறித்து ஈசுவரப்பா கேள்வி எழுப்பினார். அத்துடன் கோவா, மராட்டிய மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் தலைவர்களை சமாதானப்படுத்தவில்லை என்றும் ஈசுவரப்பா குற்றச்சாட்டு கூறினார்.
இதனால் எம்.பி.பட்டீலுக்கும், ஈசுவரப்பாவுக்கும் இடையே முதல்-மந்திரி சித்தராமையா முன்னிலையில் கடும் வாக்குவாதம் உண்டானது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் முதல்-மந்திரி சித்தராமையா தலையிட்டு அவர்கள் 2 பேரையும் சமாதானப்படுத்தினார்.
அதைதொடர்ந்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் மகதாயி நதிநீர் பிரச்சினையில் பிரதமர் தலையிட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
அதேப் போல் 3 மாநில முதல்-மந்திரிகளை அழைத்து பிரதமர் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும், கர்நாடக அனைத்துக்கட்சி தலைவர்கள் பிரதமரை சந்தித்து பேச வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கு பா.ஜனதா தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால்நேற்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
மகதாயி நதிநீர் பிரச்சினையில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் காங்கிரஸ், பா.ஜனதாவினர் மோதி கொண்டதும், இந்த பிரச்சினையில் ஏதாவது முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்த்த வடகர்நாடக மக்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

Related Tags :
Next Story