விழுப்புரம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் கைது


விழுப்புரம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் கைது
x
தினத்தந்தி 28 Jan 2018 5:48 AM IST (Updated: 28 Jan 2018 5:48 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.7½ லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டன.

விழுப்புரம்,

விழுப்புரம் பகுதியில் கடந்த ஒரு வருடமாக பூட்டியிருக்கும் வீடுகளின் கதவை உடைத்து பட்டப்பகலில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவரை பிடிக்க விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், சத்தியசீலன், பிரகாஷ், கோபி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையரை பிடிக்க பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை கண்டமங்கலம் ரெயில்வே கேட் அருகே தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை போலீசார் சந்தேகத்தின் பேரில் வழிமறித்தனர். போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர், மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓட முயன்றார். உடனே அந்த வாலிபரை போலீசார் துரத்திச்சென்றபோது ரெயில்வே தண்டவாளத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதில் சந்தேகமடைந்த போலீசார், அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் சென்னை திருவேற்காடு யாதவ தெருவை சேர்ந்த திருமலை மகன் நரேந்திரன் (வயது 28) என்பதும் இவர் விழுப்புரம் தாலுகா, நகர போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகள் மட்டுமின்றி வளவனூர், கண்டமங்கலம் ஆகிய பகுதிகளிலும் பட்டப்பகலில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் நரேந்திரன், டிப்-டாப் உடையணிந்தபடி ஏதோ கம்பெனியில் வேலை பார்ப்பவர் போன்று வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டதும், தனியாக சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதும், விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இவர் கைவரிசை காட்டியிருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து நரேந்திரனை போலீசார் கைது செய்து அவர் கொடுத்த தகவலின்பேரில் 35 பவுன் நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை மீட்டனர். மீட்கப்பட்ட நகைகள், வெள்ளிப்பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.7½ லட்சமாகும்.

தொடர்ந்து, நரேந்திரனை விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் கைதான இவர் விழுப்புரம் மாவட்டத்தில் வேறு ஏதேனும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே மீட்கப்பட்ட நகைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பார்வையிட்டார். மேலும் குற்றவாளியை பிடித்த

Next Story