‘ராக்கெட்’ தமிழரின் வெற்றி ‘சீக்ரெட்’!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சிவன், நாகர் கோவில் அருகே உள்ள சரக்கல்விளை கிராமத்தை சேர்ந்தவர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சிவன், நாகர் கோவில் அருகே உள்ள சரக்கல்விளை கிராமத்தை சேர்ந்தவர். தமிழர் ஒருவர் இஸ்ரோ தலைவராக தேர்வாகி இருப்பது இதுவே முதல் முறை. ராக்கெட் உருவாக்கத்திலும், அதனை சரியான திட்டமிடுதலுடன் விண்ணில் செலுத்துவதிலும் வல்லமை படைத்த சிவனுக்கு அவருடைய மனைவி மாலதிதான் உந்துசக்தி. திருவனந்தபுரத்தில் உள்ள இல்லத்தில் மாலதியை சந்தித்தோம். கணவர் இஸ்ரோ தலைவராகி இருக்கும் பூரிப்பில் இருந்தவர், இயல்பாக நம்மிடம் பேசினார். குடும்ப நிர்வாகத்தை திறம்பட கையாள்பவர் கணவருக்கு பக்கபலமாக விளங்குகிறார். கணவரை போலவே அனைவரிடமும் எளிமையுடனும், இன்முகத்துடனும் பழகும் சுபாவம் கொண்டவராக விளங்கும் மாலதி தங்களது குடும்பம் குறித்தும், கணவரின் பணி அனுபவங்கள் பற்றியும், அவருக்கு தான் பக்கபலமாக இருப்பது பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
‘‘நான் பிறந்தது திருவாரூர், வளர்ந்தது சென்னை. சிறுவயதிலேயே எனக்கு சட்டம் படிக்க வேண்டும் என்பதுதான் லட்சிய கனவாக இருந்தது. அதற்காக பி.ஏ. வரலாறு எடுத்து படித்தேன். எனது தந்தை சென்னை பெரம்பூரில் உள்ள நூற்பாலையில் பணியாற்றினார். அதில் வருடத்துக்கு 6 மாதம்தான் வேலை இருக்கும். 6 மாதம் வேலை இருக்காது. நிலையான வருமானம் இல்லாமல் போனதால் என்னால் சட்டம் படிக்க முடியவில்லை. எனவே தமிழ் துறையை தேர்ந்து எடுத்து தொலைதூர கல்வியில் எம்.ஏ. பட்டம் பெற்றேன். திருமணத் துக்கு முன்பு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தேன். சட்டப்படிப்பு ஆசையை எனது மகன்கள் மூலம் நிறைவேற்ற எண்ணினேன். பின்னர் அவர்கள் விருப்பத்திற்கே விட்டுவிட்டேன்’’ என்கிறார்.
உங்களது திருமண வாழ்க்கை குறித்து...?
“எங்கள் திருமணம் 1994-ம் ஆண்டில் நடந்தது. எனது கணவர் 1982-ம் ஆண்டில் இருந்தே திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தில்தான் பணியாற்றி வந்தார். அதனால் திருமணம் ஆன சில நாட்கள்தான், கணவரின் சொந்த ஊரான நாகர்கோவிலில் தங்கி இருந்தேன். அதன்பிறகு திருவனந்தபுரத்துக்கு குடிபெயர்ந்துவிட்டோம். எங்கள் மூத்த மகன் சித்தார்த் பி.டெக். படித்துள்ளான். எம்.டெக். படிக்க ‘கேட் தேர்வு’ க்கு படித்து வருகிறான். இளைய மகன் சுஷாந்த் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி. (அனிமேஷன்) படித்து வருகிறான். இரண்டு பேருமே தந்தையைப்போல் எளிமையானவர்கள்’’
உங்களது கணவர் இஸ்ரோ தலைவர் ஆகிவிட்டார் என்ற தகவலை கேட்ட தருணத்தை எப்படி உணர்ந்தீர்கள்?
‘‘அன்று எனது கணவர் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்தார். வியாழக்கிழமை தோறும் நாங்கள் கோவிலுக்கு செல்வது வழக்கம் என்பதால் அன்றைய தினம் டி.வி. பார்க்க முடியவில்லை. வீட்டு வேலைகளில் பிசியாக இருந்துவிட்டேன். பெங்களூருவில் வசிக்கும் எனது இளைய மகன் “அப்பாவை டி.வி.யில் பார்த்தேன்’’ என்று அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பை பற்றி தகவல் தெரிவித்தான். என் கணவரும் என்னை தொலைபேசியில் அழைத்து பேசினார். நிறைய சுவீட் சாப்பிட்டு தித்திப்பு ஏற்பட்டது போன்ற மனநிலை எனக்கு ஏற்பட்டது. அந்த உணர்வு ஜீரணமாவதற்கு ரொம்ப நேரம் ஆனது.
என் கணவர் சிறுவயதிலேயே விவசாய வேலைகள் உள்ளிட்டவைகளை செய்து மிகவும் கஷ்டப்பட்டு படித்துதான் முன்னுக்கு வந்துள்ளார். கடின உழைப்பு, எந்த வேலையை எடுத்தாலும் உடனடியாக செய்து முடிக்கும் திறன், படிப்படியாக தான் சார்ந்துள்ள துறையில் வளர்ச்சி என கணவரின் முன்னேற்றத்தை உடனிருந்து கவனித்து வருகிறேன். எனவே அவர் உயர் பொறுப்புக்கு நிச்சயமாக வருவார் என்ற நம்பிக்கை அதிகமாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் தற்போது நிறைவேறியுள்ளது மன நிறைவை தருகிறது’’
இந்த துறை சார்ந்தவர்களை பார்க்கும்போது உங்கள் கணவரும் இந்த துறையில் உயர்ந்த பொறுப்புக்கு வரவேண்டும் என்று எண்ணியதுண்டா?
‘‘அந்த எண்ணம் எனக்கு பலமுறை ஏற்பட்டது உண்டு. அது பேராசையாக அல்ல. எல்லோரையும்போல் எனக்கும் ஆசை இருந்தது. அவ்வளவுதான். எனது கணவர் படிப்பு சார்ந்த துறையை தேர்ந்தெடுத்திருக்கிறார். அவருக்கு இருக்கும் வேலைப்பளுவை அறிந்திருக்கிறேன். அவர் குடும்பத்தினருடன் செலவிடுவதைவிட, அதிக நேரத்தை ஆராய்ச்சியில்தான் செலவிட வேண்டி இருந்தது. அதை ஏமாற்றமாக கருதாமல், மனதை நான் பக்குவமாக்கிக்கொண்டேன்.
எனது கணவரின் பங்களிப்பு இந்தியாவுக்கே வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்கு எப்போதும் இருக்கும். அவரது முன்னேற்றத்துக்கு குடும்பச்சூழல் ஒரு தடையாக வந்து விடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தினேன். என் கணவரைப் போன்று, மகன்களை சாதனையாளராக உருவாக்க வேண்டும் என்றில்லை. அவர்கள் இரண்டு பேரும் தாங்களாகவே சாதனையாளராக ஆகிவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எந்த துறையாக இருந்தாலும் அதில் சாதிக்கலாம், பெயர் வாங்கலாம். அதற்கு முயற்சியும், கடின உழைப்பும், அர்ப்பணிப்பு உணர்வும்தான் தேவை''.
வீட்டு விஷயங்களை கணவருடன் பகிர்ந்து கொள்ளும் போது...?
‘‘அவர் சார்ந்திருக்கும் துறையில் அவருடைய பணிகள் மிகவும் நுணுக்கமானது. பதற்றம் இல்லாமல் இருந்தால்தான் நாட்டுக்கு புதிய கண்டுபிடிப்புகளை அவரும், அவரைப்போன்ற விஞ்ஞானிகளும் உருவாக்க முடியும். அதனால் அவருக்கு தொந்தரவு ஏற்படுத்தும் எந்த விஷயத்தையும் பேசமாட்டேன். குடும்ப விஷயங்களையோ அல்லது வேறு ஏதாவது தனிப்பட்ட முறையில் பேச வேண்டி இருக்கிறது என்றாலும்கூட, அதற்கான நேரத்தை அறிந்து அவரிடம் பேசுவேன். அதற்காக வீட்டுக்காரியங்கள் அவருக்கு தெரியக் கூடாது என்பதல்ல. சொல்வதற்கேற்ப சரியான சந்தர்ப்பம் அமைய வேண்டும் என்பதுதான் முக்கியம். பல நேரங்களில் அலுவலகத்தில் இருந்து டென்ஷனோடு வருவார். அதை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வேன். வீட்டுக்குள் அவர் வந்த உடன் காபி கொடுப்பேன். அதிலும் அவர் ‘கட்டன் காபி' தான் விரும்பி அருந்துவார். இரவு 9 மணிக்கு வந்தால்கூட முதலில் காபிதான் பருகுவார். அவருடைய வேலையில் ஒரு போதும் நான் தலையிட மாட்டேன். அவர் பணியில் மும்முரமாக இருக்கும் போது, சாப்பாடு வேண்டாம்’ என்று கூறினால், நானும் ‘சரி’ என்று ஒதுங்கிக் கொள்வேன். ‘ஏன் சாப்பாடு வேண்டாம் என்று கூறுகிறீர்கள்?’ என்று கேட்டு அவரை தொல்லைப்படுத்தி, கவனத்தை திசை திருப்பமாட்டேன். ஆராய்ச்சி பணியில் ஈடுபடுபவர்களுக்கு மன அமைதி முக்கியம். அப்போதுதான் அவர்களால் பணியில் திறம்பட செயல்பட முடியும். சில நேரங்களில் நள்ளிரவை கடந்தும் ஆராய்ச்சி பணிகளை தொடருவார். அது போன்ற நேரங்களில், அவர் எப்போது தூங்குவார் என்று எனக்கே தெரியாது. அந்த சமயங்களில் காலையில் சிறிது தாமதமாகத்தான் எழுவார். பிள்ளைகளும் அவரை தொந்தரவு செய்ய மாட்டார்கள். பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தபோது பள்ளிக்கூடம் தொடர்பான விஷயங்கள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கச் செல்வது என அனைத்து பணிகளையும் நானே கவனித்துக்கொண்டேன். அவரிடம் எந்த வேலையும் சொல்ல மாட்டேன்.
இப்போது எங்கள் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் இஸ்ரோ தலைவர் சிவன் வசிக்கும் வீடு அமைந்துள்ள இந்த காலனியில் இருப்பது ரொம்ப பெருமையாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். மகிழ்ச்சி தெரிவித்து எங்களுக்கு ‘வாட்ஸ்அப் மெசேஜ்’ அனுப்புகிறார்கள். போகும் இடங்களில் எல்லாம் எங்களை சிவன் சார் மனைவி, பிள்ளைகள் என்று அடையாளம் காட்டுகிறார்கள். அதுவும் எங்களுக்கு பெருமைதான்''.
உங்களது கணவரின் சொந்த ஊருக்கு அடிக்கடி செல்வது உண்டா?
‘‘நாங்கள் பிள்ளைகளுடன் அடிக்கடி செல்வதுண்டு. அங்குள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் அவ்வப்போது வழிபாடு நடத்துவோம். இப்போது அவர் இஸ்ரோ தலைவராக ஆனதற்கும் வழிபாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். ஒகி புயலின்போது எங்களது வயல் பாதிக்கப்பட்டதாக கூறினார்கள். அதைப்பார்க்கவும் சென்றிருந்தோம். எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். எனது வேண்டுதலில் கணவர் இஸ்ரோ தலைவராக வரவேண்டும் என்ற பிரார்த்தனையும் இருந்தது. தேவையான நேரத்தில் என்ன கொடுக்க வேண்டுமோ, அதை கடவுள் நிச்சயம் நமக்குத் தருவார் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு. வேண்டியது கிடைக்கவில்லை என்றாலும் சந்தோஷப்பட வேண்டும். கிடைத்தால் ரொம்ப சந்தோஷம். கிடைக்கவில்லை என்பதற்காக வருத்தப்படக்கூடாது. ஒருவருடைய தகுதி, கல்வி ஆகியவற்றைக் கொண்டுதான் உயர்வு கிடைக்கும்’’
இஸ்ரோ தலைவர் சிவனுக்கு, நீங்கள்தான் உந்து சக்தியா?
‘‘இங்கு நடைபெற்ற சில நிகழ்ச்சி களில்கூட, எனது கணவருக்கு நான் சக்தியாக இருப்பதாக கூறுவார்கள். அவருக்கான உடைகளை நான்தான் தேர்வு செய்வேன். அது நன்றாகவும் இருக்கும். எனது கணவரைப் பற்றி மற்றவர்கள் பெருமையாக பேசும்போதும், பாராட்டும்போதும் நான் அவருடைய தாயாரை நினைத்துக் கொள்வேன். அவரால்தானே இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறார். நான் யாரிடமும் விரோதம் காட்ட மாட்டேன். ‘எனது கணவர் பெரிய பொறுப்பில் இருக்கிறார். அதனால் இவர்களிடம்தான் பேசவேண்டும், இவர்களிடம் பேசக்கூடாது’ என்று நான் எப்போதுமே எண்ணியதில்லை. எல்லோரிடமும் சகஜமாக பேசுவேன். எனது மகன்களும் அப்படித்தான். இன்னும் ஒரு மாத காலம் திருவனந்தபுரத்தில் இருப்போம். அதன்பிறகு பெங்களூருவுக்கு சென்று விடுவோம். இடை இடையே திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டுக்கு வந்து செல்லலாம் என திட்டமிட்டுள்ளோம். கணவரின் பணி ஓய்வுக்குப்பிறகு நாகர்கோவிலில் குடியேற திட்டமிட்டுள்ளோம். அதற்காக வடசேரியில் வாங்கி இருக்கும் இடத்தில் எனது கணவர் பலவகை மரங்களை நட்டு வைத்து தோட்டம் அமைத்துள்ளார். எனது கணவர் வழி உறவினர்கள் நாகர்கோவிலில்தான் இருக்கிறார்கள். எனது சகோதரிகள் சென்னை மற்றும் கும்பகோணத்தில் வசித்து வருகிறார்கள்’’ என்று மனம் பூரிக்கிறார்.
சிவன், மாலதியை போலவே அவருடைய பிள்ளைகளும் எளிமையாக இருக்கிறார்கள். மூத்தமகன் சித்தார்த் கூறும் போது, “எனது தந்தை இஸ்ரோ தலைவராகியிருப்பது எனக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நான் எங்கு சென்றாலும் எனது தந்தை பெயரைக் கூறி என்னை நான் அடையாளப்படுத்திக் கொள்ளமாட்டேன். படிக்கிற இடங்களில்கூட அதை சொல்வதில்லை. அவர்களாக தெரிந்து கேட்பார்கள். எனது தந்தை அவர் சார்ந்த துறையில் உயர்ந்திருக்கிறார். அவரை போல் எனது துறையில் நானும் உயர வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்கு இருக்கிறது. நான் தேர்ந்தெடுத்துள்ள எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தற்போது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரண்டு குறும்படங்களை எடுத்துள்ளேன்’’ என்று கூறினார்.

Related Tags :
Next Story