குழந்தைகள் நலன் காக்கும் ஆடை


குழந்தைகள் நலன் காக்கும் ஆடை
x
தினத்தந்தி 28 Jan 2018 1:32 PM IST (Updated: 28 Jan 2018 1:32 PM IST)
t-max-icont-min-icon

குழந்தைகள் அணிந்து கொள்வதற்கு ஏற்ற மென்மையான துணிகளால் வடிவமைக்கப்படும் டயாபர்களை உற்பத்தி செய்யும் பெண் தொழில் முனைவோராக உருவெடுத்திருக்கிறார், சினேகா தாகூர்.

குழந்தைகள் அணிந்து கொள்வதற்கு ஏற்ற மென்மையான துணிகளால் வடிவமைக்கப்படும் டயாபர்களை உற்பத்தி செய்யும் பெண் தொழில் முனைவோராக உருவெடுத்திருக்கிறார், சினேகா தாகூர். பெங்களூருவை சேர்ந்த இவருக்கு இரண்டு குழந்தைகள். முதல் குழந்தை பிறந்தபோது சந்தையில் விற்பனையாகும் டயாபர்களை பயன்படுத்தி வந்திருக்கிறார். அவை குழந்தைக்கு ஒவ்வாமை பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கிறது. இரண்டாவது குழந்தை பிறந்ததும் டயாபருக்கு மாற்று வழிமுறையை தேடியிருக் கிறார்.

‘‘இரண்டாவது குழந்தை பிறந்தபோது துணி டயாபர்களை பயன்படுத்த முடிவு செய்தேன். குழந்தைக்கு அதனை அணிவது மென்மையாக இருக்கும் என்பதோடு நீண்ட நாட்கள் பயன்படுத்தவும் முடியும். அதனால் விலையும் குறைவாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டேன். ஆனால் அத்தகைய டயாபர்கள் இந்தியாவில் அதிக அளவில் புழக்கத்தில் இல்லாத நிலையே இருக்கிறது. அதனை வெளிநாட்டில் இருந்து உறவினர் மூலமாக வரவழைத்தேன். அவற்றின் பயன்பாடு குறைவாக இருப்பதால் விலை அதிகமாயிருந்தது’’ என்றவர் 2016-ம் ஆண்டு சுற்றுச்சூழலுக்கு பங்கம் விளைவிக்காத வகையில் துணியாலான டயாபர்களை தயாரிக்க தொடங்கி இருக் கிறார்.

‘‘தற்போது புழக்கத்தில் இருக்கும் பெரும்பாலான டயாபர்களில் ரசாயனங்கள் கலந்திருக்கின்றன. அவற்றை அணிவது குழந்ைதயின் சருமத்திற்கு நல்லதல்ல. அவை குப்பை களாக குவிந்து சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகின்றன. ஒரு டயாபர் மக்குவதற்கு 500 ஆண்டுகள் தேவைப்படுகிறது. துணியால் தயாரிக்கப்படும் டயாபர்கள் சருமத்தை உலர்வாக வைத்திருக்கும் விதத்திலான துணிகளால் உருவாக்கப்படுகின்றன. குழந்தை களுக்கு ஏற்ற விதத்தில் மென்மையாக இருக்கும். சருமத்திற்கும் பாதுகாப்பு அளிக்கும். இந்த வகை டயாபரின் விலை அதிகமாக இருப்பதாக தோன்றினாலும் நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியும் என்பதால் செலவு குறையும். அவற்றை எளிதாக துவைத்து உலரவைத்து பயன்படுத்தலாம். உடல் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் உகந்த இத்தகைய டயாபர்கள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை.

பிறந்த குழந்தை வளர்ந்து சுயமாகவே கழிவறைக்கு செல்வதற்கு பழகும் வரை சுமார் 4 ஆயிரம் டயாபர்கள் தேவைப்படலாம். அதற்காக ரூ.50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகக்கூடும். துணியால் தயாரிக்கப்படும் டயாபர்களை பயன்படுத்தினால் நான்கில் ஒரு பங்குதான் செலவாகும்’’ என்கிறார்.

Next Story