படிக்கும்போதே வேலை.. அனுபவம்.. பணம்..
கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே வேலை.. அனுபவம்.. பணம் ஆகிய மூன்றையும் பெற இன்றைய இளைய தலைமுறையினர் விரும்புகிறார்கள்.
கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே வேலை.. அனுபவம்.. பணம் ஆகிய மூன்றையும் பெற இன்றைய இளைய தலைமுறையினர் விரும்புகிறார்கள். அதற்காக அவர்கள் படித்துக்கொண்டிருக்கும்போதே பகுதி நேரமாக வேலை செய்து பணம் சம்பாதிக்கிறார்கள்.
டெல்லியை சேர்ந்த அனுஜா கல்லூரியிலே கலகலப்பான பெண். அழகான தோற்றம், நட னத்திறமை, வசீகரமான பேச்சுக்கு சொந்தக்காரர். கல்லூரியில் நடைபெறும் கலாசார போட்டி களில் மட்டும் பங்குபெற பெற்றோர் அனுமதி கொடுத்தார்கள். முக்கியமான போட்டிகளில் பங்கேற்று விட்டு, முழு நேரமும் படிப்பிலே கவனம் செலுத்தினார். ஆனால் அவரது திறமையை பார்த்த தனியார் அமைப்பு ஒன்று, விழா நிகழ்ச்சிகளில் வரவேற்பு பெண்ணாக பகுதி நேரமாக பணிபுரிய அழைத்தது. மாதத்தில் நாலைந்து நாட்கள் மாலை நேரத்தில் மட்டுமே வேலை இருக்கும், நல்ல சம்பளம் தருகிறோம் என்றார்கள்.
அனுஜா தனது பெற்றோரிடம் அனுமதி கேட்டார். முதலில் அவர்கள் சம்மதிக்கவில்லை. ஆனால் மாணவி, ‘எனக்கு நிறைய அனுபவங்கள் தேவை. அதனை பெற இதுபோன்ற வேலையில் நான் சேருவது நல்லது’ என்று வாதிட்டார். ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்க அனுமதி தாருங்கள் என்றார். அரைகுறை மனதோடு அனுமதி கொடுத்தார்கள். அனுஜாவிற்கு உள்ளபடியே அங்கு நல்ல அனுபவம் கிடைத்தது. நிறைய பேரை பார்த்தாள். அவர்களோடு புன்னகையோடு பேசினாள். பலரது குணாதிசயங்களை புரிந்துகொள்ள முடிந்தது. நிகழ்ச்சியில் தனக்கு ஒதுக்கப்பட்ட பணியை நிறைவாக செய்து மகிழ்ச்சியடைந்தார். எதிர்பார்த்த அளவு பணமும் கிடைத்தது.
“இப்போது நான் மாதத்தில் பத்து நாட்கள் வரை மாலை நேர வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு செல்கிறேன். என்னால் மாதம் 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடிகிறது. நான் படித்து முடித்த பின்பு வேலை கிடைக்குமா? கிடைக்காதா? என்ற கவலை எல்லாம் இப்போது எனக்கு இல்லை. இதுநாள் வரை கிடைத்த அனுபவத்தை வைத்து எதிர்காலத்தில் ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை என்னாலும் நடத்தமுடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது” என்கிறார்.
பெங்களூருவை சேர்ந்த மாணவி இசபெல் அக்கவுண்டன்சி முடித்துவிட்டு சி.ஏ. படிக்க திட்டமிட்டுள்ளார். அதற்கு தேவைப்படும் பணத்திற்காக, இடைப்பட்ட காலத்தில் நிறுவனம் ஒன்றில் பகுதி நேர கணக்காளராக பணியாற்றி ஓரளவு சம்பாதிக்கிறார். அந்த அனுபவமும், பணமும் அவருக்கு அதிக மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. முதலில் தயங்கி தயங்கி சம்மதித்த இசபெல்லின் பெற்றோர் இப்போது தங்கள் மகளின் திறமையை பார்த்து பெரும் மகிழ்ச்சியடைகிறார்கள்.
“கல்லூரியில் படிக்கும் போது பகுதிநேர வேலை என்பது நம் திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவும். மேலும் படித்து முடித்த உடனே வேலைக்கு போய் திருதிருவென்று முழிப்பதைவிட, அதற்கு கொஞ்சம் முன்அனுபவம் இருந்தால் என்ன வேலை கிடைத்தாலும் சமாளித்துவிடலாம். எந்த படிப்பு படிக்கிறோமோ அந்த துறை சார்ந்த நிறுவனத்தில் பகுதிநேர வேலை பார்ப்பது நல்லது. சுய சம்பாத்தியம் என்பது நம் சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ளவும் உதவும்” என்கிறார், இசபெல்.
சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர் ரதீஷ் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். தன் படிப்புக்கு ஆகும் செலவை ஈடுசெய்ய போட்டோ ஸ்டூடியோவில் பகுதி நேர பணியில் சேர்ந்தார். பணம் கிடைத்தது. அத்துடன் புகைப்பட கலைஞராக பிரகாசிக்கவும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது. அதன் மூலம் நிறைய வாடிக்கையாளர்கள் தொடர்பும் கிடைத்தது. அவர்களில் ஒருவர், ‘படிப்பு முடிந்ததும் உனக்கு பண உதவி செய்கிறேன். நீயே சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றை தொடங்கிவிடலாம்’ என்றும் உறுதிகொடுத்திருக்கிறார்.
பகுதிநேர வேலைகள் எங்கெங்கு கிடைக்கும்?
* இளைஞர்களால் பெரிதும் விரும்பப்படும் இடம் காபி ஷாப். அவர்களைப் போல இளைஞர்களே பெரும்பாலும் அங்கு வருகை தருவதால் வேலை செய்ய இதமாக இருக்கும். டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களில் நாலைந்து மணி நேரம் வேலை பார்த்து மாதம் பத்தாயிரம் வரை சம்பாதிக்கலாம்.
* பீட்சா ஷாப்களும் இளைஞர்களிடையே பிரசித்திப் பெற்றவை. இங்கும் இளைஞர்களுக்குத்தான் பணியில் முதலிடம். சில மணி நேரங்கள் வேலை பார்த்து இங்கு எட்டாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க வாய்ப்பிருக்கிறது.
* ரெஸ்டாரண்ட், நட்சத்திர ஓட்டல் போன்ற இடங்களிலும் பணி வாய்ப்பு இருக்கிறது. வித்தியாசமான அனுபவங்களோடு இங்கும் பத்தாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.
* கால் சென்டர்கள் நாடெங்கும் உள்ளது. உள்ளே நுழைந்தால் நிச்சயம் வேலை உண்டு. இதில் டேட்டா என்ட்ரி வேலை முக்கியமானது. பல நேரங்களில் ஷிப்ட் முறைகளும் உண்டு. வீட்டிலிருந்தும்கூட ஆன்லைன் மூலம் இந்தப் பணியை செய்யலாம்.
* நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வேலை இளம் பெண்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. பல்வேறு நிறுவனங்கள் அவர்களுக்கு 15 ஆயிரம் வரை மாத சம்பளம் வழங்குகிறது. ஓய்வு நாட்களிலும், மாலை நேரங்களிலும் இந்த பணியை மேற்கொள்ளலாம்.
கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பகுதி நேர பணிகள் நிறைய இருக்கின்றன. சரியானவற்றை தேர்ந்தெடுத்து, சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் அதில் வெற்றி பெறலாம்.

Related Tags :
Next Story