வர்த்தக துறைமுகத்துக்கு ஆதரவாக சத்தியாகிரக போராட்டம் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு


வர்த்தக துறைமுகத்துக்கு ஆதரவாக சத்தியாகிரக போராட்டம் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு
x
தினத்தந்தி 29 Jan 2018 4:15 AM IST (Updated: 28 Jan 2018 10:54 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் வர்த்தக துறைமுகத்தை உடனே அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வர்த்தக துறைமுக ஆதரவு குழு சார்பில் திங்கள்சந்தை அருகே உள்ள பிலாக்கோடு சந்திப்பில் நேற்று சத்தியாகிரக போராட்டம் நடந்தது.

திங்கள்சந்தை,

குமரி மாவட்டத்தில் வர்த்தக துறைமுகத்தை உடனே அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வர்த்தக துறைமுக ஆதரவு குழு சார்பில் திங்கள்சந்தை அருகே உள்ள பிலாக்கோடு சந்திப்பில் நேற்று சத்தியாகிரக போராட்டம் நடந்தது. இதற்கு துறைமுக ஆதரவு குழு குருந்தங்கோடு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வேல்மயில் தலைமை தாங்கினார். இதில் பா.ஜனதா நிர்வாகி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த சத்தியாகிரக போராட்டத்தில் பா.ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு, வர்த்தக துறைமுகம் அமைய வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கி பேசினார். சத்தியாகிரக போராட்டம் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது.


Next Story