தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு கெட்டு விட்டது


தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு கெட்டு விட்டது
x
தினத்தந்தி 29 Jan 2018 4:15 AM IST (Updated: 29 Jan 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதாக, சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்து உள்ளார்.

நாசரேத்,

நாசரேத் காமராஜர் பஸ் நிலையம் அருகே சமத்துவ மக்கள் கழகத்தின் 3-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி ராஜா தலைமை தாங்கினார். ஆத்தூர் நகர துணை செயலாளர் கனகராஜ் வரவேற்றார்.

ஆழ்வார்திருநகரி ஒன்றிய அவைத்தலைவர் சுதாகர் சைமன்ராஜ் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், சமத்துவ மக்கள் கழகத்தின் முக்கிய குறிக்கோள் இலவச மருத்துவம், இலவச கல்வி ஆகும். தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. இதனால், அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு பின்தங்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது. இதற்கு தமிழக அரசு தான் காரணம். பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழக அரசை கண்டித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பஸ் மறியல் போராட்டத்தில் சமத்துவ மக்கள் கழகத்தினர் திரளாக கலந்து கொள்வார்கள் என்றார்.

முன்னதாக கூட்டத்தில், நாசரேத்தை தலைமை இடமாக கொண்டு தனி தாலுகா அமைக்க வேண்டும். நாசரேத் அருகே நடந்து வரும், சிப்காட் தொழில்வளாகம் அமைப்பதற்காக பணிகளை அரசு விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story