நெல்லை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து


நெல்லை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து
x
தினத்தந்தி 29 Jan 2018 4:00 AM IST (Updated: 29 Jan 2018 2:33 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் விழா நேற்று நடந்தது. சங்கரன்கோவில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமுக்கு, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். நகரசபை ஆணையாளர் தாணுமூர்த்தி, சுகாதாரத்துறை மருத்துவர்கள் ராஜரத்தினம், தனபால், ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் அமைச்சர் ராஜலட்சுமி கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். நகரசபை சுகாதார அலுவலர் பாலசந்தர், சுகாதார ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், ஆரியங்காவு, ராமச்சந்திரன், முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் உள்ள சுகாதார மையங்களில் 14 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. கீழப்பாவூரில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் நடந்த முகாமில் நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. கலந்துகொண்டு, முகாமை தொடங்கி வைத்தார். டாக்டர்கள் ராஜ்குமார், சுப்பிரமணியன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா, நகரப்பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி தேவராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். டாக்டர் பாலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திசையன்விளை அரசு மருத்துவமனை மற்றும் பஸ்நிலையத்தில் நடந்த முகாமில் இன்பதுரை எம்.எல்.ஏ. கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். திசையன்விளை நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நாங்குநேரி சுங்கச்சாவடியில் நடந்த முகாமில் வசந்தகுமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். டாக்டர்கள் செல்வ ரத்தினம், இந்து லேகா, மேற்பார்வையாளர் செந்தில் ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர் சங்கரலிங்கம், ராஜேசுவரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story