திருவண்ணாமலையில் ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பஸ் கட்டண உயர்வை கண்டித்து திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் திருவண்ணாமலை மாவட்ட ஆம் ஆத்மி கட்சி சார்பில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
திருவண்ணாமலை,
பஸ் கட்டண உயர்வை கண்டித்து திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் திருவண்ணாமலை மாவட்ட ஆம் ஆத்மி கட்சி சார்பில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் யோகேஷ்கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளாராக ஆம் ஆத்மி தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் சைதைசுவாமி கலந்து கொண்டு பேசினார். இதில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story