பஸ் கட்டணத்தை குறைத்து இருப்பது மக்களை கேவலப்படுத்துவதாக உள்ளது சீமான் பேட்டி
தமிழகத்தில் பஸ் கட்டணத்தை 2 காசு, 5 காசு குறைத்து விட்டு பஸ் கட்டண குறைப்பு என்று சொல்வது மக்களை கேவலப்படுத்துவது போல உள்ளது என நாமக்கல்லில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
நாமக்கல்,
தமிழகத்தில் பஸ் கட்டணம் சுமார் 100 விழுக்காடு உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 2 காசு, 5 காசு என குறைத்து இருப்பது, பொதுமக்களை கேவலப்படுத்துவது போல உள்ளது. இதை கட்டண குறைப்பு என்று சொல்வதே கேவலம்.
நாங்கள் ஆட்சி மாற்றம் மற்றும் ஆள்மாற்றத்துக்கு வந்தவர்கள் இல்லை. அரசியல் மாற்றம், அமைப்பு மாற்றம் ஏற்படுத்துவோம் என கூறி 7 ஆண்டுகளாக பணி செய்து வருகிறோம். தற்போது நடிகர் ரஜினிகாந்த் அதை சொல்கிறார் என்றால் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சோடா பாட்டில் வீசுவோம் என கூறி உள்ளார். எல்லாரும் வீசுவார்கள், யார் சரியாக வீசுவார்கள் என்பது வீசினால்தான் தெரியும். அதற்காக ஜீயர் மன்னிப்பு கேட்டு இருப்பதாக சொல்கிறீர்கள். இது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. இதை நான் வரவேற்கிறேன். உளமார வருத்தம் தெரிவித்து விட்டால் அதை ஏற்க வேண்டும்.
நான் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என பேசியபோது இனவெறி என்றனர். தற்போது அதைத்தான் நடிகர் கமல்ஹாசன் பேசி வருகிறார். அவர் புகழ்பெற்ற நடிகராக இருப்பதால் அமைதியாக உள்ளனர். ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு இன்னும் 7 ஆண்டுகள் பணி உள்ளது. அதன் பிறகு அவருடன் இணைந்து செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து அவர் நாமக்கல் பிரசன்னா நகர், சிட்கோ காலனி, பெரியப்பட்டி, வகுரம்பட்டி பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். அங்கு அனைவரும் உறுதிமொழியும் எடுத்து கொண்டனர். பின்னர் நாமக்கல் மெட்ரோ அரிமா சங்கம் நடத்திய வல்வில் ஓரி மண்டல சந்திப்பு நிகழ்ச்சியிலும் சீமான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
இந்த நிகழ்ச்சிகளில் மண்டல செயலாளர்கள் டாக்டர் பாஸ்கர், அருண், தென்மண்டல செயலாளர் வெற்றிகுமரன், மாநில நிர்வாகி ஜெகதீச பாண்டியன், மாவட்ட செயலாளர் மனோகரன், தலைவர் ரத்தினம், பொருளாளர் விவின், துணை தலைவர் சேகர், துணை செயலாளர் முருகன், நகர செயலாளர் உலகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story