984 மையங்களில் 1.60 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்
தர்மபுரி மாவட்டத்தில் 984 மையங்களில் 1.60 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை கலெக்டர் விவேகானந்தன் தொடங்கி வைத்தார்.
தர்மபுரி,
இந்தியா முழுவதும் போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை அறவே ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நாடு முழுவதும் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் முதல் கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. தர்மபுரி மாவட்டத்தில் 984 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாம்களில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து பெற்று சென்றனர். மேலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சுங்கச்சாவடிகள் ஆகிய இடங்களிலும் முகாம் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதே போன்று 18 நடமாடும் சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்த பணிக்காக பல்வேறு துறைகளை சேர்ந்த 4 ஆயிரம் பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் ஈடுபட்டனர்.
இந்த முகாமை தர்மபுரி புறநர் பஸ் நிலையத்தில் கலெக்டர் விவேகானந்தன் தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், மாவட்டம் முழுவதும் மொத்தம் 1 லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் தங்களது குழந்தைகளுக்கு இதுவரை எத்தனை முறை சொட்டு மருந்து அளித்திருந்தாலும், கூடுதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து பெற்று போலியோ நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சீனிவாசராஜூ, உதவி கலெக்டர் ராமமூர்த்தி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ஆஷா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜெகதீஸ்குமார், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பிருந்தா, மாவட்ட தாய் சேய் நல அலுவலர் பார்கவி, தாசில்தார் ஜெயலட்சுமி, மாவட்ட மலேரியா அலுவலர் சுப்பிரமணி மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
மொரப்பூர் வட்டாரத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. மொரப்பூர் அரசு சுகாதார மருத்துவமனையில் வட்டார மருத்துவர் ஜீவானந்தம் முகாமை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார். இதேபோல் மொரப்பூர், கம்பைநல்லூர், சிந்தல்பாடி, ராமியனஅள்ளி, கடத்தூர், ரெயில் நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. டாக்டர்கள், சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டு ரெயில்கள், பஸ்கள், இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்ற 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story