சிங்காரா உள்ளிட்ட 3 வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது


சிங்காரா உள்ளிட்ட 3 வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 29 Jan 2018 3:15 AM IST (Updated: 29 Jan 2018 4:55 AM IST)
t-max-icont-min-icon

சிங்காரா உள்ளிட்ட 3 வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது.

மசினகுடி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நவீன கேமராக்கள் மூலம் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதை தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டலமாக சேர்க்கப்பட்டுள்ள சிங்காரா, சீகூர் மற்றும் தெங்குமரஹாடா ஆகிய 3 வனப்பகுதிகளில் உள்ள புலிகளை நவீன கேமராக்கள் மூலம் கணக்கெடுக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது.

இதை தொடர்ந்து சிங்காரா வனச்சரகர் காந்தன் உத்தரவின் பேரில் 54 இடங்களில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. அந்த கேமராக்கள் இயங்குகிறதா? என்பதை புலி போல் வனத்துறை ஊழியர் ஒருவர் படுத்து அந்த காட்சி பதிவாகிறதா? என்று பரிசோதித்து பார்க்கப்பட்டது. ஏற்கனவே பொருத்தப்பட்ட இடங்களில் உள்ள கேமராக்களில் புலிகள் சம்பந்தமான காட்சிகள் எதுவும் இடம் பெற்று இருக்கிறதா? என்றும் ஆய்வு நடத்தப்பட்டது.

இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது:-

சிங்கா வனப்பகுதியை போன்று சிகூர் வனப்பகுதியில் 97 இடங்களிலும், தெங்குமரஹாடா வனப்பகுதியில் 55 இடங்களிலும் நவீன கேமராக்கள் மரங்களில் பொருத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த கேமராக்கள் பொறுத்தப்பட்டு 40 நாட்கள் புலிகளின் நடமாட்டம் குறித்து கண்டறியப்படும். பின்னர் பதிவான காட்சிகள் மூலம் வனப்பகுதிகளில் எத்தனை புலிகள் நடமாட்டம் இருக்கிறது என்பது துல்லியமாக கண்டறியப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story