கோவை மாநகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்யக்கோரி உண்ணாவிரதம்
கோவை மாநகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
கோவை,
கோவை மாநகராட்சியில் 3,221 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசு நிர்ணயம் செய்துள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., ஜனசக்தி மஸ்தூர் சபா, தமிழ்நாடு அம்பேத்கர் சுகாதார துப்புரவு பணியாளர் சங்கம் சார்பில் கோவை டாடாபாத் குடிநீர் மேல்நிலைத்தொட்டி முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
ஜனசக்தி மக்கள் சபா மாவட்ட தலைவர் சி.பழனிசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அம்பேத்கர் துப்புரவு பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் தமிழ்நாடு செல்வம் முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு அமைப்புகள் மற்றும் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படை யில் பணியாற்றி வரும் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணைத்தலைவர் என்.செல்வராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளர்கள், டிரைவர்கள், கிளனர்கள், குடிநீர் பணியாளர்கள் என்று மொத்தம் 3,221 ஒப்பந்த பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் கடந்த 2006-ம் ஆண்டு வேலைக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள். ஆனால் அவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7 ஆயிரம் மட்டுமே கூலியாக வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு நிறுவனத்தில் 480 நாட்கள் பணிபுரிந்தால் அவர்களை பணிநிரந்தரம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் கோவை மாநகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த பணியாளர்கள் கடந்த 12 ஆண்டாக பணியாற்றி வந்தும் அவர்களுக்கு குறைந்தபட்ச கூலியாக ரூ.15 ஆயிரம் கூட வழங்கப்படவில்லை.
எனவே 480 நாட்களுக்கு மேல் பணியாற்றி வரும் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அடையாள உண்ணாவிரதம் தற்போது நடத்தப்படுகிறது. இனியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். அத்துடன் மாநகராட்சி அலுவலகத்தை தொடர்ந்து முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம்.
மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், ஒப்பந்த பணியாளர்களுக்கு ரூ.16 ஆயிரத்து 389 கூலியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த கூலிகூட மாநகராட்சியில் வழங்கப்படவில்லை. அத்துடன் ஒப்பந்த பணியாளர்களுக்கு வாரவிடுமுறை, சீருடை கள், பணிபாதுகாப்பு கருவிகள் உள்பட எதுவுமே வழங்கவில்லை. எனவே சமவேலைக்கு சமகூலி என்ற அடிப்படையில் தற்காலிகமாக ஒப்பந்த பணியாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த கூலியை உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story