திண்டுக்கல்லில் வியாபாரி சரமாரி வெட்டிக்கொலை
திண்டுக்கல்லில் கடலை மிட்டாய் வியாபாரி மர்மநபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் முத்தழகுபட்டியை சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மனைவி முருகேஷ்வரி. சண்முகவேல் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுடைய மகன்கள் சக்திவேல் (வயது 22), தட்சிணாமூர்த்தி (20). மகள் கீதா லட்சுமி (17). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. சக்திவேல் அந்த பகுதியில் கடலை மிட்டாய் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.
இந்தநிலையில் அவர், நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் முத்தழகுபட்டியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த கும்பல், அரிவாள்களால் சக்திவேலை சரமாரியாக வெட்டினர். இதில் அவருக்கு கழுத்து, தலை, மார்பு, கை ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டு விழுந்தது. படுகாயமடைந்து சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அந்த பகுதி மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு சிகாமணி தலைமையில் திண்டுக்கல் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதேபோல் அந்த பகுதியில் சக்திவேலின் உறவினர்கள் ஏராளமானோர் திரண்டனர்.
அவர்கள், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, சக்திவேலின் உடலை போலீசார் எடுக்க விடாமல் தடுத்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் சக்திவேலின் உடலை மீட்டனர்.
பின்னர் சக்திவேலின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சக்திவேலை கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சக்திவேலின் தம்பி தட்சிணாமூர்த்தி, மிட்டாய் கடையில் இருந்த போது இரவு நேரத்தில் ஒரு கும்பல் அவரை வெட்டி படுகொலை செய்தது. இதனால் சக்திவேலுக்கும் அந்த நபர்களுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. எனவே அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சக்திவேலை வெட்டி கொலை செய்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பட்டப்பகலில் துப்புரவு தொழிலாளர்கள் 3 பேர் வெட்டி கொல்லப்பட்டனர். இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகல்நகர் ரவுண்டானா அருகே புதுமாப்பிள்ளை ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்தநிலையில் தற்போது மிட்டாய் வியாபாரி ஒருவர் மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல்லில் அடுத்தடுத்து தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Related Tags :
Next Story