பொதுமக்கள், எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க பஸ் கட்டணம் முடிந்த அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது - எடப்பாடி பழனிசாமி பேட்டி
பொதுமக்கள், எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இன்றைக்கு பஸ் கட்டணம் முடிந்த அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது என்று மதுரையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மதுரை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- பஸ் கட்டணம் 5 பைசா வீதம் குறைக்கப்பட்டிருக்கின்றது. அதனால் மக்களுக்கு எந்த விதமான பயன் இருக்கும்? உயர்த்தப்பட்டபோது அதிகமாக இருந்ததே? குறைக்கும்போது மிகவும் குறைவாக இருக்கிறதே?.
பதில்:- 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. 2011-ம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது போக்குவரத்து கழகத்தினுடைய ரூ.3,392 கோடியே 15 லட்சம் கடன் நிலுவைத்தொகையாக வைத்துவிட்டுச் சென்றிருக்கின்றார்கள். அதோடு, ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.922 கோடியே 24 லட்சம். அதுமட்டுமல்லாமல், பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.1,528 கோடியே 5 லட்சம்.
அதுமட்டுமல்லாமல், போக்குவரத்து கழகத்தினுடைய 112 சொத்துகளை அடமானம் வைத்து சென்றுள்ளார்கள். அவர்களுடைய ஆட்சிக்காலத்தில், 6 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுட்காலம் முடிந்த பஸ்கள் சுமார் 8,500. இவ்வளவு சுமைகளுக்கு இடையிலும் ஜெயலலிதா அரசால் கடந்த 6 ஆண்டுகாலமாக போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்படவில்லை.
இன்றைக்கு அதிகப்பட்டியான டீசல் விலை உயர்வு காரணமாகவும், புதிய பஸ்கள் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கின்ற காரணத்தினாலும் அதிகமாக செலவழிக்க வேண்டிய சூழ்நிலை, பழைய பஸ்களுக்கு புதிய உதிரிபாகங்கள் வாங்குவதற்குண்டான இழப்பீடு அதிகமாகிறது, போக்குவரத்து ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு என பலவகையிலும் ஏற்பட்ட உயர்வின் காரணமாக பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இருந்தாலும், பொதுமக்கள், எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இன்றைக்கு பஸ் கட்டணம் முடிந்த அளவுக்கு குறைக்கப்பட் டுள்ளது.
கேள்வி:- நம் மாநிலத்தின் வளர்ச்சி கருதி மாநில அரசு, மத்திய அரசோடு ஒத்துப்போகும் இந்த சமயத்தில்கூட, மத்திய அரசு இந்த கட்டண உயர்வு தேவையானது தான் என்று கூறுகிறார்களே?. அதே நேரத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் போன்றோர் இந்த அரசை ஊழல் அரசு போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி...
பதில்:- இந்த கேள்வியை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். எங்களுடைய கட்சியோ அல்லது எங்களுடைய நிறுவனத்தைப் பற்றியோ கேட்டீர்களேயானால் நாங்கள் பதில் சொல்ல முடியும். மற்றவர்களுடைய கருத்து குறித்து அவர்களிடம் தான் தெளிவு கேட்க வேண்டும்.
இதை எல்லாம் ஊடக, பத்திரிகை நண்பர்கள் தெளிவாக மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். ஏனென்றால், போக்குவரத்து கழகம் என்பது மிகப்பெரிய நிறுவனமாக இருக்கின்றது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். 1 கோடியே 40 லட்சம் பொதுமக்கள் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிறுவனம் நலிவடைந்துவிடக்கூடாது என்பதற்காகவும் இந்த கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கின்றது.
ஆகவே, பொதுமக்கள் அன்புகூர்ந்து அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story