திருவள்ளுவர் தினவிழாவையொட்டி தமிழர்-கன்னடர் ஒற்றுமை பேரணி
பெங்களூரு தமிழ் சங்கம் சார்பில் திருவள்ளுவர் தினவிழாவையொட்டி தமிழர்-கன்னடர் ஒற்றுமை பேரணி நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், முதல்- மந்திரி சித்தராமையா, எடியூரப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெங்களூரு,
பெங்களூரு தமிழ் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழர்-கன்னடர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, 9-ம் ஆண்டு திருவள்ளுவர் தின விழா தமிழர்-கன்னடர் ஒற்றுமை பேரணி நேற்று பெங்களூருவில் விமரிசையாக நடைபெற்றது.
இதில் முதல்-மந்திரி சித்தராமையா, சாந்திகிரி சாமி ஆனந்தஜோதி ஞான தபஸ்வி ஆகியோர் அல்சூர் ஏரிக்கரையோரம் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர்தூவி மரியாதை செலுத்தியும் திருவள்ளுவர் தின விழாவை தொடங்கி வைத்தனர். பின்னர், சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
9-ம் ஆண்டு திருவள்ளுவர் தின விழா கொண்டாடும் தமிழ் சங்கத்துக்கு வாழ்த்துகள். சென்னையில் சர்வக்ஞர் சிலையும், பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையும் நிறுவப்பட்டது. பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டபோது நான் எதிர்க்கட்சி தலைவராக கலந்து கொண்டேன். தற்போது முதல்-மந்திரியாக ஆன பின்னர் ஆண்டுதோறும் திருவள்ளுவர் தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறேன். கர்நாடகத்தில் தமிழர்களும், கன்னடர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள்.
தமிழ் சங்கத்துக்கு விரைவில் நிலம் ஒதுக்கி கொடுக்கப்படும். மாநிலத்தில் உள்ள தமிழ் பள்ளிகளில் நிலவும் தமிழ் ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், விழாவில் கலந்து கொண்ட கர்நாடக பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பாவும் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அத்துடன் தமிழர்-கன்னடர் ஒற்றுமை பேரணியையும் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், ‘பெங்களூருவில் 18 ஆண்டுகளாக நிலவி வந்த திருவள்ளுவர் சிலை நிறுவுவதற்கான பிரச்சினைக்கு நான் தீர்வு கண்டேன். அதைத்தொடர்ந்து எனது ஆட்சிக்காலத்தில் பெங்களூரு அல்சூரில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. திருவள்ளுவர் சிலை திறப்பு குறித்து பலர் ஏதோதோ பேசுவார்கள். ஆனால் உண்மை என்ன என்பது? தமிழர்களுக்கு தெரியும்.
நான் ஆட்சியில் இருந்தபோது சிவமொக்கா தமிழ் சங்கத்துக்கு ரூ.2 கோடியும், சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு 4 ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டது. எனது ஆட்சிக்காலத்தில் தமிழர்களுக்கான அபிவிருத்தி பணிகள் அதிகமாக நடந் தன. உங்களின் ஆசீர்வாதம் எங்களுக்கு இருக்க வேண்டும். தமிழர்களும், கன்னடர்களும் ஒருதாய் பிள்ளைகள். எனவே, மொழி வேறுபாடு இன்றி ஒற்றுமையாக இருக்க வேண்டும்‘ என்றார்.
மேலும், வருகிற தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட தமிழர்களுக்கு டிக்கெட் வழங்கப்படுமா? என எடியூரப்பாவிடம் கேள்வி கேட்டபோது, ‘இந்த விழாவில் அரசியல் வேண்டாம்‘ என கூறி சென்றார்.
திருவள்ளுவர் தின ஊர்வலத்தின்போது திருவள்ளுவர் சிலையானது அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. ஊர்வலத்துக்கு முன்பாக மேள, தாளங்கள் முழங்க பல்வேறு நடனக்கலைஞர்கள் வெவ்வேறு வேஷமிட்டு ஆடிப்பாடி சென்றனர்.
இந்த விழாவில், மந்திரிகள் கே.ஜே.ஜார்ஜ், ரோஷன் பெய்க், கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ், மாநகராட்சி மேயர் சம்பத்ராஜ், கர்நாடக அ.தி.மு.க.வின் பெங்களூரு மாவட்ட முன்னாள் செயலாளர் எஸ்.டி.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட கர்நாடக மேல்-சபை உறுப்பினர் (காங்கிரஸ்) ரிஸ்வான் அர்ஷத், தமிழ் சங்கத்துக்காக ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பெங்களூரு தமிழ் சங்க தலைவர் தி.கோ.தாமோ தரன், செயலாளர் ராமசுப்பிரமணியன், உதவி செயலாளர் சுந்தரவேல் மற்றும் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story