மதுரையில் வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கவர்னர் ஆய்வு


மதுரையில் வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கவர்னர் ஆய்வு
x
தினத்தந்தி 30 Jan 2018 5:00 AM IST (Updated: 29 Jan 2018 11:21 PM IST)
t-max-icont-min-icon

மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர்.

மதுரை,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு மதுரை வந்தார். இங்கு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அவர், நேற்று காலை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். அதன்பின் அவர் நாகமலைப்புதுக்கோட்டையில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்றார். அங்கு குழந்தைகளுக்கு பழம், இனிப்பு, தக்காளி சாதம் உள்ளிட்ட உணவு வகைகளை பரிமாறினார். அதன்பின் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சாதனை விளக்க கண்காட்சியை கவர்னர் பார்வையிட்டதுடன், தூய்மை பாரத இந்தியா விழிப்புணர்வு பிரசார வாகனத்தையும் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து கவர்னர், காந்திமியூசியம் சென்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் காந்தி மியூசிய வளாகத்தில் உள்ள காந்தியின் புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள் ஆகிவற்றை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின், கவர்னர் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அங்கு அவர் மதுரை மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கவர்னர், கோரிக்கை மனுக்களை பெற்றார். மொத்தம் 100 பேர் மனுக்கள் கொடுத்தனர். பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டருக்கு கவர்னர் உத்தரவிட்டார். மனு வாங்கும் நிகழ்ச்சியின் போது, ஒரு சிறுவன் தனது கையில் ஏற்பட்ட விபத்துக்கு மருத்துவ உதவி கேட்டு வந்தான்.

அப்போது கவர்னர், பெரிய ஆஸ்பத்திரி டீனை உடனடியாக வருமாறு அழைத்தார். அதன்பேரில் டீன் மருதுபாண்டியன் சிறிது நேரத்தில் அங்கு வந்தார். அவரிடம் கவர்னர், இந்த சிறுவனுக்கு வேண்டிய சிகிச்சைகளை அளிக்கும்படி கேட்டு கொண்டார். உடனே அங்கேயே அந்த சிறுவனை டீன் பரிசோதித்து தேவையான மருத்துவ வசதிகளை உடனே ஏற்பாடு செய்கிறோம் என்று உறுதி அளித்தார்.

அதன்பின், கவர்னர் மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள தெற்கு சித்திரை வீதி சென்றார். அங்கு மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தையும், இ-கழிப்பறைகளையும் திறந்து வைத்தார். பின்னர் மாணவ-மாணவிகளுடன் “சுத்தமாக இருப்போம்“ என்று உறுதி மொழி எடுத்து கொண்டார். தொடர்ந்து அவர் சாலையில் இருந்து மண் அள்ளும் வாகன இயந்திரத்தையும் தொடங்கி வைத்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

பின்னர் கவர்னர் மேலமாசி வீதியில் காந்தி ஆடை துறந்த காதிபவனுக்கு சென்று பார்வையிட்டார்.

பின்னர் அங்கிருந்து விமான நிலையம் சென்ற கவர்னர் இரவு 7.30 மணி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். விடுவார்கள். ஆனால் உங்களுடைய பாராட்டு, பல கோடி ரூபாய் வெகுமதிகளுக்கு சமம் என்றாராம். அதாவது பணத்தை விட அன்பான வார்த்தையே ஒருவருக்கு மகிழ்ச்சியை தரும் என்பதனை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம் என்று கவர்னர் கூறினார். 

Next Story