பள்ளிக்கூட மாணவியை காதலிக்க வற்புறுத்திய வேன் டிரைவர் கைது


பள்ளிக்கூட மாணவியை காதலிக்க வற்புறுத்திய வேன் டிரைவர் கைது
x
தினத்தந்தி 30 Jan 2018 4:00 AM IST (Updated: 30 Jan 2018 12:00 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே, பள்ளிக்கூட மாணவியை காதலிக்க வற்புறுத்திய வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

சங்கரன்கோவில்,

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலமரத்தோணியை சேர்ந்தவர் பரமேசுவரன். இவருடைய மகன் சுரேஷ்குமார் (வயது 20), வேன் டிரைவர். இவரது பக்கத்து கிராமமான சுப்புலாபுரத்தை சேர்ந்த 16 வயது மாணவி, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவரை சுரேஷ்குமார் ஒருதலையாக காதலித்து வந்தார்.

மாணவி பள்ளிக்கு செல்லும்போது, அவர் அடிக்கடி பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்தார். அதை மாணவி ஏற்க மறுத்துள்ளார். தன்னை பின் தொடர்ந்து வர வேண்டாம் என மாணவி பலமுறை சுரேஷ்குமாரை கண்டித்தார். ஆனாலும், அவர், மாணவியை பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த அந்த மாணவி, தனது தந்தையிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று டிரைவர் சுரேஷ்குமாரை கைது செய்தனர்.

Next Story