பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
மகளின் மர்ம சாவுக்கு நீதி கேட்டு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
தென்காசி அருகே உள்ள காசிதர்மத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 28). கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இவர் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 23-10-2017 அன்று குடும்பத்தோடு தீக்குளித்தார். இதில் இசக்கிமுத்து, அவருடைய மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் மதி ஆருண்யா, அக்ஷயா என்ற பரணிகா ஆகிய 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவத்தை தொடர்ந்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிரதான வாசலைத்தவிர அனைத்து வாசல்களும் மூடப்பட்டன. பிரதான வாசல் வழியாக கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்கள் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் நேற்று நடந்தது. ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுக்க வந்தனர். அவர்களை போலீசார் சோதனை நடத்தி கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர். அப்போது கடையநல்லூர் அருகே உள்ள மாவடிக்கால் தெற்குவிளை தெருவை சேர்ந்த பொன்னுச்சாமியின் மனைவி மகேசுவரி (வயது 55) என்பவர், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். உள்ளே செல்வதற்காக பிரதான வாசலை கடந்த சிறிது நேரத்தில், தனது மகளின் மர்ம சாவுக்கு நீதி வேண்டும் என்று கூறிக்கொண்டே கையில் வைத்து இருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீவைக்க முயன்றார். அவரது இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனே, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாடசாமி, லட்சுமணன் ஆகியோர் மகேசுவரி வைத்திருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கினார்கள். பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றியபின், அங்கிருந்து தனியாக அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து போலீசார் மகேசுவரியை அழைத்து சென்று கலெக்டரிடம் மனு கொடுக்க வைத்தனர். அந்த மனுவில், எனது மகள் தேவிகங்கா கடந்த 6-1-2016 அன்று இறந்துவிட்டார். அவருடைய சாவில் மர்மம் இருப்பதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கலெக்டர் அலுவலகத்திற்கு 3 முறையும், போலீஸ் அதிகாரிகளிடம் 10 முறையும் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கலெக்டரிடம் கொடுத்த மனு தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு விசாரணைக்கு சென்றால் அங்கு இருப்பவர்கள் அவதூறாக பேசுகிறார்கள். எனவே, எனது மகள் சாவுக்கு நீதி விசாரணை வேண்டும். எனது மகளின் கணவர் தற்போது 2-வது திருமணம் செய்து விட்டார். அவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
பாளையங்கோட்டை படப்பக்குறிச்சியை சேர்ந்த புயல்முருகன் என்பவர் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு ரோட்டில் படுத்து ரகளையில் ஈடுபட்டார். உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது நான் கடந்த 27-ந்தேதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பாளையங்கோட்டை போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது என்னிடம் இருந்த பணத்தை பிடுங்கிவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார்.
இதேபோல் அதே பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவரும் போலீசாரை கண்டித்து ரோட்டில் படுத்து ரகளையில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story