அல்லிநகரம் நகராட்சியில் அடிப்படை வசதிகள் கேட்டு கலெக்டரிடம் மக்கள் மனு
தேனி அல்லிநகரம் நகராட்சி 12-வது வார்டில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கக்கோரி மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். இக்கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.
இந்து எழுச்சி முன்னணி நகர தலைவர் வெங்கலபாண்டி தலைமையில் தேனி அல்லிநகரம் நகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட பொதுமக்கள் சுமார் 100 பேர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தேனி அல்லிநகரம் நகராட்சி 12-வது வார்டு பாண்டி நகரில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள் நடந்து செல்லவும், இருசக்கர வாகனங்களில் செல்வதற்கும், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வந்து செல்வதற்கும் போதிய பாதை வசதி இல்லை. எங்கள் பகுதியில் பொது கழிப்பிட வசதி இல்லை. தெருவிளக்கு, குடிநீர் வசதியும், சாக்கடை கால்வாய் வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. எனவே, எங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அதேபோல், மக்கள் தேசியம் கட்சியின் மாவட்ட செயலாளர் சின்னசாமி தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்கு உட்படுத்தாததால் விலை உயர்ந்து வருகிறது. தமிழக அரசு பஸ் கட்டணம் உயர்த்தியது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே, பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். சோத்துப்பாறை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்’ என்று கூறி இருந்தனர். கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி, துரித நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story