அமைப்புசாரா நல வாரிய தொழிலாளர்கள் நாளைக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும், அதிகாரி தகவல்


அமைப்புசாரா நல வாரிய தொழிலாளர்கள் நாளைக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும், அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 30 Jan 2018 3:45 AM IST (Updated: 30 Jan 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

அமைப்புசாரா நல வாரியம் மற்றும் கட்டுமானம் நல வாரிய தொழிலாளர்கள் தங்கள் ஆதார் எண்ணை நாளைக்குள் இணைக்க வேண்டும் என்று காஞ்சீபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம்,

மாநில அளவில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலனை பாதுகாக்கும் வகையிலும், ஒழுங்குபடுத்தும் நோக்கத்திலும் அரசு நலவாரியங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம், உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம், அமைப்பு சாரா ஓட்டுனர்கள் நலவாரியம், தையல் தொழிலாளர் நலவாரியம், முடிதிருத்துவோர் நலவாரியம், காலணி, தோல் பொருட்கள் உற்பத்தி, தோல் பதனிடுதல் தொழிலாளர் நலவாரியம், ஓவியர் நலவாரியம், பொற்கொல்லர் நலவாரியம், மண்பாண்ட தொழிலாளர் நலவாரியம், வீட்டுப்பணியாளர் நலவாரியம், சமையல் தொழிலாளர் நலவாரியம் உள்பட 17 நலவாரியங்களில் மாநில அளவில் மொத்தம் 90 லட்சம் பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர்.

ஆதார் எண கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால் அரசு நலத்திட்ட உதவிகள் தடையின்றி விரைவாக தொழிலாளர்களை சென்றடைய அனைத்து தொழிலாளர்களும் கட்டாயமாக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

எனவே அனைத்து தொழிலாளர்களும் தங்களது உறுப்பினர் அடையாள அட்டை நகலுடன், ஆதார் அட்டை நகலையும் சேர்த்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தொழிலாளர் உதவி ஆணணயர் அலுவலகம் (சமூக பாதுகாப்பு திட்டம்), 46-பி, விளக்கடிகோயில் தெரு, (ரங்கசாமிகுளம் அருகில்), காஞ்சீபுரம் என்ற முகவரியில் நாளைக்குள்(புதன்கிழமை) கட்டாயம் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் 044-27230279 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story