லாரி மீது பஸ் மோதல்; டிரைவர், கண்டக்டர் படுகாயம்

நல்லம்பள்ளி,
ஆந்திர மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி பஞ்சுபாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை திருச்சி மாவட்டம் தொட்டியத்தை சேர்ந்த லோகேஸ்வரன் (வயது 26) என்பவர் ஓட்டிச்சென்றார். தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள தடங்கம் மேம்பாலத்தில் வந்தபோது பின்னால் வந்த அரசு பஸ், லாரி மீது மோதியது. இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவரான மதுரை மாவட்டம் சாஸ்திரி நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (56), விருதுநகரை சேர்ந்த கண்டக்டர் ராஜேந்திரன் (58) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story