பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தி.மு.க.-கூட்டணி கட்சியினர் சாலை மறியல்
பஸ் கட்டணம் உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று தஞ்சை மாவட்ட பகுதிகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன் (கும்பகோணம்), ராமச்சந்திரன் (ஒரத்தநாடு) ஆகியோர் உள்பட 1,983 பேர் கைது செய்யப்பட்டனர்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று நகர தி.மு.க. சார்பில் தஞ்சை சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பஸ் கட்டணம் உயர்வை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க. மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், அன்பழகன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் தமிழழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் கலையரசன் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கரூப்பூர் ரவுண்டானாவில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் கணேசன் உள்பட 220 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கும்பகோணம்-தஞ்சை சாலை தாராசுரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் உள்பட 180 பேரை போலீசார் கைது செய்தனர். கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோவில் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழருவி உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர். சாலை மறியல் போராட்டத்தையொட்டி கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசமூர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மகாதேவன், ரமேஷ்குமார், ராமமூர்த்தி உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சுவாமிமலை கடைவீதியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் நாகராஜ் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். அம்மாப்பேட்டையில் தஞ்சை-நாகை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் தியாக.சுரேஷ், தெற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் உள்பட 95 பேரை போலீசார் கைது செய்தனர்.
பந்தநல்லூரில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், காங்கிரஸ் வட்டார தலைவர் சபில்ரகுமான், விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலாளர் முருகப்பா உள்பட 180 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் திருபனந்தாளில் சாலை மறியலில் ஈடுபட்ட மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை உள்பட 142 பேர் கைது செய்யப்பட்டனர்.
பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே சாலை மறியலில் ஈடுபட்ட நகர தி.மு.க. பொறுப்பாளர் செந்தில்குமார், இந்திய கம்யூனிஸ்டு மாவட்டக்குழு உறுப்பினர் பக்கிரிசாமி, ம.தி.மு.க. நகர செயலாளர் செந்தில் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர். ஆலடிக்குமுளை கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. ஏனாதிபாலு, பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராமநாதன், ம.தி.மு.க ஒன்றியசெயலாளர் மதி உள்பட 56 பேரும், துவரங்குறிச்சி முக்கூட்டு சாலையில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பார்த்திபன் உள்பட 40 பேரும், கரம்பயம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மார்க்ஸ் உள்பட 13 பேரும் கைது செய்யப்பட்டனர்.
மதுக்கூர் பஸ் நிலையத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் இளங்கோ உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர். அதிராம்பட்டினத்தில் 55 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஒரத்தநாட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் மு.காந்தி, ஒரத்தநாடு ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., ஒரத்தநாடு நகர செயலாளர் கிருஷ்ணகுமார் உள்பட 160 பேர் கைது செய்யப்பட்டனர். மேலஉளூர், செல்லம்பட்டி, குருமண்தெரு ஆகிய ஊர்களில் நடந்த சாலை மறியலில் 180 பேரும், திருவோணம் ஒன்றியம் ஊரணிபுரத்தில் நடந்த சாலை மறியலில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் மகேஷ்கிருஷ்ணசாமி உள்பட 260 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கும்பகோணம், சுவாமிமலை, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவோணம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் மொத்தம் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 1,983 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பஸ் கட்டணம் உயர்வை முழுமையாக வாபஸ் பெறக்கோரி கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாதர் சங்க நகர தலைவர் சுமதி தலைமை தாங்கினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story