பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க., தோழமை கட்சியினர் சாலை மறியல்
பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க., தோழமை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர்,
பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், அதனை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் சாலை மறியல் நடத்தப்படும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி, அரியலூர் பஸ் நிலையம் முன்பு தி.மு.க. மற்றும் தோழமை கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் ஜோதிவேல் மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட 190 பேரை போலீசார் கைது செய்து அரியலூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
ஜெயங்கொண்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் கருணாநிதி தலைமையில், தோழமை கட்சியினர் நான்குரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாநில இளைஞரணி இணை செயலாளர் சுபாசந்திரசேகர், காங்கிரஸ் பொருளாளர் மனோகரன், கம்யூனிஸ்டு கட்சியினர், விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட 56 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
செந்துறை அருகே உள்ள ஆர்.எஸ்.மாத்தூர் பஸ் நிலையத்தில், பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் பெருநற்கிள்ளி தலைமையில், பஸ்களை சிறைபிடித்து தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து குவாகம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
உடையார்பாளையம் தி.மு.க. நகர செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் உடையார்பாளையம்-திருச்சி சாலையில் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட ஜெயங்கொண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் தனசேகர் மற்றும் தி.மு.க. பொறுப்பாளர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினரை உடையார்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் சுத்தமல்லி பஸ் நிலையத்தில் தா.பழூர் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் சவுந்தரராஜன் தலைமையில், சாலை மறியலில் ஈடுபட்ட 105 பேரை போலீசார் கைது செய்தனர்.
தா.பழூரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமையில் தோழமை கட்சி நிர்வாகிகள் பலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தா.பழூர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஒரு பெண் உள்பட 130 பேரை கைது செய்து அங்குள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
ஜெயங்கொண்டம் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் தலைமையில் தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்று பஸ் கட்டண உயர்வை கண்டித்து மீன்சுருட்டி கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டு பஸ் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்ட பொருளாளர் பொய்யாமொழி, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் மற்றும் பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்து மீன்சுருட்டி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
திருமானூரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் (கிழக்கு) கென்னடி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேரை திருமானூர் போலீசார் கைது செய்து அங்கு உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதேபோல் கீழப்பழுவூர் கண்ணிகைபுரம் ரெயில்வே கேட்டில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் (மேற்கு) அசோக சக்கரவர்த்தி தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சியினர் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 78 பேரை கீழப்பழுவூர் போலீசார் கைது செய்து அங்கு உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
அரியலூர் மாவட்ட பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. மற்றும் தோழமை கட்சியை சேர்ந்த பெண்கள் உள்பட 1,100 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து வேப்பூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வேப்பூர் தெற்கு ஒன்றிய அமைப்பாளர் மருவத்தூர் ராஜேந்திரன், மாநில வர்த்தக அணி செயலாளர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் பங்கேற்ற 110 பேரை குன்னம் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
மங்களமேட்டை அடுத்துள்ள திருமாந்துறை டோல்கேட்டில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து வேப்பூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட அமைப்பாளர் சம்பத், துணை அமைப்பாளர் கரிகாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 125 பேரை மங்களமேடு போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் போலீசார் மாலையில் விடுவித்தனர்.

Related Tags :
Next Story