25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த வந்த டாஸ்மாக் பணியாளர்கள் 80 பேர் கைது
25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்த வந்த டாஸ்மாக் பணியாளர்கள் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி,
பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும், பணி விதிகள் உருவாக்கப்பட வேண்டும், தமிழக அரசின் கொள்கை முடிவின்படி டாஸ்மாக் கடைகள் மூடப்படும்போது பணியிழக்கும் பணியாளர்களை அரசு துறைகளில் காலியாக உள்ள காலி பணியிடங்களில் விருப்பத்தின் அடிப்படையில் பணியமர்த்த வேண்டும், பணி ஓய்வு பெறுபவர்களுக்கு பணிக்கொடை குறைந்தபட்சம் ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கவேண்டும், ரத்து செய்யப்பட்ட பழைய விகித ஊக்கத்தொகையை மீண்டும் வழங்கிட வேண்டும், மாதாந்திர போக்குவரத்து பயணப்படி அனைத்து மேற்பார்வையாளர்களுக்கும் ரூ.1000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் திருச்சி பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்திற்குள் புகுந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து அந்த அலுவலகம் முன் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் டாஸ்மாக் பணியாளர்கள், சங்கத்தின் மாநில துணை தலைவர் சரவணன் தலைமையில் அந்த அலுவலகத்தை நோக்கி வந்தனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.
போலீசார் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து அந்த இடத்தில் நின்றபடியே முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவகுமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதனை தொடர்ந்து போலீசார் மாநில துணை செயலாளர் முருகானந்தம் உள்பட 80 பேரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story