மேட்டூர் அணை நீர்மட்டம் 44 அடியாக குறைந்தது: கோடையில் 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
மேட்டூர் அணை நீர்மட்டம் 44 அடியாக குறைந்தது. எனவே கோடை காலத்தில் திருச்சி உள்பட 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
மேட்டூர்,
பருவமழை காலத்தில் பெய்யும் மழைநீரை சேமித்து வைத்து குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்ய கடந்த 1934-ம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை கட்டப்பட்டது. இந்த அணை மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய 12 மாவட்ட பாசன மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
பாசன தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். கடந்த ஆண்டு தமிழகத்தில் பருவமழை கை கொடுக்கவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாமல் போனது. ஆனாலும் கடந்த அக்டோபர் மாதம் 2-ந்தேதி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அப்போது அணை நீர்மட்டம் 98 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து குறைவாக இருந்தபோதிலும் பாசனத்துக்காக தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. அணைக்கு வந்த தண்ணீர் அளவை விட திறந்து விடப்பட்ட நீரின் அளவு அதிகமாக இருந்ததால் அணை நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டே வந்தது.
நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு அணை நீர்மட்டம் 44.33 அடியாக இருந்தது. அணைக்கு 72 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 1,750 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
நேற்று காலை 8 மணிக்கு அணை நீர்மட்டம் 44.16 அடியாக இருந்தது. அணைக்கு 55 கனஅடி தண்ணீர் வந்தது. கிழக்கு மற்றும் மேற்குகரை கால்வாய் பாசனம் மூலம் பயன்பெறும் மக்களின் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தற்போது இருக்கும் நீர் இருப்பை வைத்து தான் அடுத்த பருவமழை காலமான வருகிற மே மாதம் வரை குடிநீர் தேவையை சமாளிக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களான சேலம், நாமக்கல் உள்பட 12 மாவட்டங்களுக்கும், வேலூர் மாநகராட்சி, சேலம் மாநகராட்சி, சேலம் மற்றும் ஆத்தூர் கூட்டு குடிநீர் திட்டம், காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் போன்ற பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கும் மேட்டூர் அணை தான் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
எனவே கோடை மழை தீவிரம் அடைந்தால் தான் குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும். இல்லையெனில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், இந்த ஆண்டு கோடையை சமாளிப்பது சவாலாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Related Tags :
Next Story