பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலை மறியல்
பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி மாவட்ட முழுவதும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 5 எம்.எல்.ஏ.க்கள், குமரி அனந்தன் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்,
தமிழக அரசு பஸ் கட்டணத்தை கடந்த 20-ந் தேதி முதல் உயர்த்தி உள்ளது. இதனால் ஏழை- எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், பஸ் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் 29-ந் தேதி (அதாவது நேற்று) தி.மு.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை சிறிதளவுக்கு குறைத்து தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது. எனினும் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க.வினர் நேற்று மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே போல் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர். அனைவரும் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் சாலையில் அமர்ந்து பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதில் தி.மு.க. நகர செயலாளர் மகேஷ், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன் மற்றும் நிர்வாகிகள் பெர்னார்டு, சிவராஜ், ஷேக்தாவூது, சதாசிவம், வளர்அகிலன், வசந்தன் செல்வம், நகர இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் ஆனந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட தலைவர் அசோகன்சாலமன், அந்தோணிமுத்து, நவீன்குமார், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், பொருளாளர் பிச்சைமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, மாவட்டகுழு உறுப்பினர் அந்தோணி, பெஞ்சமின், லெட்சுமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர தலைவர் கணேஷ், தாஸ், மேசியா, பாபு, உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
அதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபி தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்ட சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. உள்பட 220 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கோட்டாரில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக நாகர்கோவிலில் நேற்று பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுபோல் சுசீந்திரத்திலும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. நேற்று காலை சுசீந்திரத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி.மு.க. அலுவலகம் முன்பு, ஆஸ்டின் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க. போன்ற கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கூடினர். அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சுசீந்திரம் தபால் நிலையம் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசை கண்டித்தும், பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது.
இந்த போராட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், ஜெகன் பாலபெருமாள், தி.மு.க. ஒன்றிய செயலாளர் தாமரை பாரதி, மதியழகன், பேரூர் செயலாளர் முத்து, மாடசாமி, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பினிட்லால் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேரை சுசீந்திரம் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-
காந்தியடிகள் காலத்தில் வெள்ளையனிடம் இருந்து மக்களை காப்பாற்ற போராடப்பட்டது. தற்போது, தமிழக அரசிடம் இருந்து மக்களை காப்பாற்ற போராட வேண்டியது உள்ளது. தமிழக அரசு உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை முழுமையாக குறைக்காமல், கண்துடைப்பாக சிறிதளவு குறைத்துள்ளது. பஸ் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆரல்வாய்மொழி சந்திப்பில் தோவாளை ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் கேட்சன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பூதலிங்கபிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க. பேரூர் செயலாளர்கள் சுப்பிரமணியன், சிவகுமார், முன்னாள் ஊராட்சி தலைவர் கல்யாண சுந்தரம், காங்கிரஸ் வட்டார தலைவர்கள் ராஜா, செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 142 பேரை ஆரல்வாய்மொழி போலீசார் கைது செய்து அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
தக்கலையில் நடந்த போராட்டத்தில் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. உள்பட 41 பேரும், கருங்கலில் நடந்த போராட்டத்தில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. உள்பட 88 பேரும், திங்கள்சந்தையில் நடந்த போராட்டத்தில் பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்பட 104 பேரும் கைது செய்யப்பட்டனர். இதுபோல், மாவட்டத்தில், மார்த்தாண்டம், அருமனை, திருவட்டார், குளச்சல் உள்பட 16 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் மொத்தம் 1,332 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட் டனர்.

Related Tags :
Next Story