கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்


கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
x
தினத்தந்தி 30 Jan 2018 3:19 PM IST (Updated: 30 Jan 2018 3:19 PM IST)
t-max-icont-min-icon

திருமணம் ஆன சில மாதங்களிலேயே, என்ன ஏதாவது விசேஷமா? என்று உறவினர்கள் கேட்பார்கள். இதற்கு, கருவுற்றிருக்கிறாயா என்று அர்த்தம்.

கருவுறும் தருவாயில் இருக்கும் இளம்பெண், கருவுக்கு ஊட்டம் அளிக்கக் கூடிய உணவு, கரு தங்காமல் தாமதப்படுத்தும் உணவு என பிரித்துப் பார்த்துதான் சாப்பிட வேண்டும்.

கருவை பாதிக்கக்கூடிய உணவு எது என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அதன்படி தேவையான உணவுகளை சாப்பிட்டும், சாப்பிடக்கூடாத உணவுகளை தவிர்த்தும் வந்தால், நிச்சயம் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.

வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள உணவுப் பொருட்களில் ஒன்று தான் பட்டை. இந்த பட்டை கூட கருச்சிதைவை ஏற்படுத்தும். ஆகவே கரு வேண்டாம் என்பவர்கள், உணவில் பட்டையை அதிகம் சேர்த்து வரலாம். கர்ப்பிணிகள் அன்னாசிப் பழத்தை சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். காரணம் அந்த பழத்தை சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும்.

அதேபோல பப்பாளியிலும் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் அதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால் கரு கலைந்துவிடும். அதிலும் இதன் விதையை சாப்பிட்டால், நான்கே வாரங்களில் கரு கலைந்துவிடும்.வெல்லம் உடலின் வெப்பத்தை தூண்டும் பொருள். இதிலும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆகவே இதனை உணவில் அதிகம் சேர்த்தாலும் கரு அழிந்துவிடும்.

கரும்பிலும் வைட்டமின் சி உள்ளது. மேலும் கரும்பு உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டதாகும். எனவே இதனை உட்கொண்டால், கருப்பையானது சுருங்கி, கரு கலைந்துவிடும்.வேர்க்கடலை சாப்பிட்டால், கரு கலையும் என்று பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதனை தினமும் ஒரு கையளவு பச்சையாக சாப்பிட்டு வந்தால், கரு கலைந்துவிடும்.எள் கருப்பையை சுருக்கும் தன்மை கொண்டது. அதனால் தான் கர்ப்பிணிகளை எள் சாப்பிட வேண்டாம் என்று சொல்வார்கள். மேலும் இதில் வைட்டமின் சி சத்தும் அதிக அளவு உள்ளது. எனவே இதையும் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும்.

Next Story