கழிவறை அமைத்து சுகாதாரமாக வாழ்வோம் கலெக்டர் பேச்சு
கழிவறை அமைத்து சுகாதாரமாக வாழ்வோம் என்று கலெக்டர் சுந்தரவல்லி பேசினார்.
பொன்னேரி,
பொன்னேரியை அடுத்த கொக்குமேடு கிராமத்தில் உள்ள பள்ளியில் தீண்டாமை உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி தீண்டாமை உறுதிமொழி எடுத்தார்.
பொன்னேரி ஆர்.டி.ஓ. முத்துசாமி, தாசில்தார் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீஞ்சூர் ஒன்றிய ஆணையாளர் ராஜேந்திரபாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
இதில் ஆசிரியர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து அனுப்பம்பட்டு ஊராட்சியில் அடங்கிய உத்தண்டிகண்டிகை கிராமத்தில் நடந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டர் சுந்தரவல்லி பேசினார்.
நாம் வீடு அமைக்கும்போது பூஜைஅறை, சமையல் அறைக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். அதே போல் கழிவறை அமைத்து சுகாதாரமாக வாழ்வோம். தொழுநோய் ஒரு நோயல்ல. குறைபாடு. அதனை தடுத்து நாம் ஒன்றிணைந்து சுகாதாரத்தை பேணி காத்தால் தடுக்கப்படும்.
கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட தொழுநோய்கள் துணைஇயக்குனர் கனிமொழி, மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ், துணை தாசில்தார் சீனிவாசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரன், மகளிர் குழுவினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story