தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி நாட்களை அதிகரிக்க கோரி ஆர்ப்பாட்டம்


தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி நாட்களை அதிகரிக்க கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2018 3:30 AM IST (Updated: 31 Jan 2018 12:06 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே.பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே.பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் வீரப்பன் தலைமை தாங்கினார். இதில் தேசிய ஊரக வேலை திட்ட பணி நாட்களை ஆண்டுக்கு 100-ல் இருந்து 200 நாட்களாகவும், தினசரி கூலியை ரூ.400-ஆகவும் உயர்த்தி தர வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டையுடன் கூலி வழஙக வேண்டும்.

நிலுவையில் உள்ள கூலியை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Next Story