வளர்ச்சி பணிகள் குறித்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு


வளர்ச்சி பணிகள் குறித்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு
x
தினத்தந்தி 31 Jan 2018 4:45 AM IST (Updated: 31 Jan 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் இன்று (புதன்கிழமை) மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்கிறார்.

ராமநாதபுரம்,

நிதி ஆயோக் திட்டத்தில் தமிழகத்திலேயே ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய 2 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு அடிப்படை வளர்ச்சி பணிகள் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்றவும், கல்வி, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களிலும் முன்னேற்றம் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த திட்டத்தின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று (புதன்கிழமை) காலை ராமநாதபுரம் வருகிறார். இதற்காக மதுரையில் இருந்து காரில் புறப்பட்டு காலை 9.45 மணியளவில் ராமநாதபுரம் வரும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் நடராஜன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

பின்னர் 12 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து காரில் உச்சிப்புளி கடற்படை விமானதளத்திற்கு செல்லும் அவர் அங்கு கடற்படை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வதோடு, கடற்படை விமானதள விரிவாக்கம் குறித்து ஆய்வு செய்கிறார்.

இதனை தொடர்ந்து அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் பிற்பகல் 2.45 மணியளவில் நெல்லை செல்லும் அவர் அங்கு அதிகாரிகளுடன் ஆய்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அங்கிருந்து மதுரை வந்து விமானத்தில் டெல்லி செல்கிறார். 

Next Story