தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2018 4:00 AM IST (Updated: 31 Jan 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சியினர் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடி சிதரம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் வில்சன், தெற்கு மாவட்ட செயலாளர் தயாளன் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொது செயலாளர் சுந்தர் கலந்து கொண்டு பேசினார். தமிழக அரசு உயர்த்தி உள்ள பஸ் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் குருஸ் திவாகர், மாவட்ட அவைத்தலைவர்கள் ஜெயகோபால்(தெற்கு), பாஸ்கர் (வடக்கு), தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயந்தி, தூத்துக்குடி மாநகர செயலாளர் பிரபாகர், தெற்கு மாவட்ட பிரதிநிதி சூசைமுத்து, ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் தேவராஜ், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story