மானாமதுரையில் சேதமடைந்த சமுதாய கூடத்தை சீரமைக்க வலியுறுத்தல்
மானாமதுரையில் பேரூராட்சி சார்பில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் சேதமடைந்து காணப்படுவதால், அதனை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மானாமதுரை,
மானாமதுரை பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
நகரில் குடியிருக்கும் பொதுமக்களின் வசதிக்காகவும், அரசு சார்பு நிகழ்ச்சிகள் நடத்தவும் நகரின் மையப்பகுதியில் பேரூராட்சி சார்பில் கடந்த 2002-ம் ஆண்டு சமுதாய கூடம் கட்டப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் குறைந்த செலவில் சுப நிகழ்ச்சிகளை குறைந்த வாடகையில் இந்த சமுதாய கூடத்தில் நடத்தி வந்தனர். நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து வசதியுடன் சமுதாய கூடம் இருப்பதால் பலதரப்பினரின் ஆதரவைப்பெற்று தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் நடந்து வந்தன.
இதனால் பேரூராட்சிக்கு வருவாயும் பெருகியது. ஆனால் தற்போது போதிய பராமரிப்பு இல்லாததால் சமுதாய கூடத்தின் பல பகுதிகளும் சேதமடைந்தது, உட்புறம் தரை தளம், மேல் தளம், பக்கவாட்டு பகுதி, சமையல் கூடம், மணமக்கள் அறைகள், கழிப்பறைகள் என பலவும் சேதமடைந்து அபாய நிலை உள்ளது. இதனால் அதிகாரிகள் சமுதாய கூடத்தில் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்தனர். இதனால் கடந்த சில மாதங்களாக நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை.
மேலும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தனியார் கல்யாண மகாலை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சமுதாய கூடத்தின் வாடகையாக ரூ.10 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது. தனியார் திருமண மகால்களில் குறைந்தபட்ச வாடகையே ரூ.50 ஆயிரம் என்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக முகூர்த்த நாட்கள் உள்ள நிலையில் சமுதாய கூடம் மூடப்பட்டிருப்பதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டிருப்பதுடன், பேரூராட்சிக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பேரூராட்சி சமுதாய கூடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Related Tags :
Next Story