சாத்தூர் அருகே கிணறு தோண்டும் போது மண் சரிந்து அண்ணன்- தம்பி சாவு


சாத்தூர் அருகே கிணறு தோண்டும் போது மண் சரிந்து அண்ணன்- தம்பி சாவு
x
தினத்தந்தி 31 Jan 2018 3:00 AM IST (Updated: 31 Jan 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே கிணறு தோண்டிய போது மண் சரிந்து அண்ணன்-தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சாத்தூர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நென்மேனி முடித்தலை கிராமத்தில் வைப்பாற்று படுகையில் மதுரையை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இங்கு புதிதாக கிணறு தோண்டும் பணி நடந்து வருகிறது.

இதில் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த தங்கமலை என்பவரது மகன்கள் பழனிவேல் (வயது 23), சூரியா(21) மற்றும் சக்திவேல் (18), கோபிநாத் (23) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

கிணற்றினுள் நேற்று நால்வரும் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக மேலே இருந்து மண் சரிந்து விழுந்தது. இதில் அண்ணன் தம்பிகளான பழனிவேல், சூரியா ஆகியோர் சிக்கி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

மற்ற இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். எனினும் சம்பவத்தை நேரில் பார்த்ததில் அதிர்ச்சியடைந்து மயங்கி விட்டனர். அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். தீயணைப்பு படையினர் உதவியோடு சக்திவேல், கோபிநாத் ஆகியோர் மேலே மீட்கப்பட்டனர். பலியானோரின் உடல்கள் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

Next Story