காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சூரமங்கலம்,
சேலம் ரெயில்வே கோட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்ட 10 ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.இ.எஸ்., என்.எப்.ஐ.ஆர். தொழிற்சங்கத்தினர் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்க பொதுச்செயலாளர் சூரியபிரகாசம் தலைமை தாங்கினார். கோட்ட தலைவர் பெருமாள், கிளை செயலாளர் ரவிக்குமார், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயப்பிரகாஷ், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் வடமலை மற்றும் நிர்வாகிகள் ரவீந்திரன், பார்த்திபன், ஜெயராமன், பூபேஷ் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ரெயில்வே ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதுபோல ரெயில்வே தொழிற்சங்கமான எஸ்.ஆர்.எம்.யூ. சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்ட செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து விட்டு, பழைய பென்சன் திட்டமே தொடர வேண்டும் என்றும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் நிர்வாகிகள் அருள், நவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

Related Tags :
Next Story