வெல்டிங் பட்டறை முன்பு சாலையில் ராக்கெட் போல திடீரென சீறிப்பாய்ந்த சிலிண்டரால் பரபரப்பு
சேலத்தில் ரத்தினசாமிபுரத்தில் உள்ள வெல்டிங் பட்டறை முன்பு சாலையில் ராக்கெட் போல திடீரென சீறிப்பாய்ந்த சிலிண்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் அரிசிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் நீதிராஜா மற்றும் மாதவன். இவர்கள் 2 பேரும் சேலம் ரத்தினசாமிபுரம் சீத்தாராம் செட்டி பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார்கள். இந்த பட்டறைக்கு தேவையான வாயு சிலிண்டர்கள் பட்டறை முன்பு வெளிப்பகுதியில் தார்சாலையில் ஓரமாக வைக்கப்பட்டு இருந்தன.
அவற்றில் 5 காலி சிலிண்டர்களும், 2 சிலிண்டர்களில் மட்டும் வாயு நிரம்பிய நிலையில் இருந்தன. பட்டறையில் பணிபுரிந்த ஊழியர் ரத்தினசாமி என்பவர் நேற்று காலை, 2 சிலிண்டர்களில் ஒரு சிலிண்டரை இயக்க முயற்சித்தார்.
அப்போது திடீரென சிலிண்டரின் வால்வு திறந்து அதிக சத்தத்துடன் சாலையில் ராக்கெட் போல கியாசை கக்கியபடி சீறிப்பாய்ந்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 100 அடி தூரத்திற்கு தார்சாலையில் பாய்ந்து சென்ற சிலிண்டர் அங்குள்ள வீட்டின் மீது மோதியது.
இந்த விபத்தால் வீட்டின் முன்பக்கத்தில் உள்ள ஜன்னல், சுற்றுச்சுவர் பலத்த சேதமடைந்தது. மேலும் மற்றொரு வீட்டின் படிக்கட்டும் சேதம் ஆனது. தார்சாலையில் ராக்கெட் போல சிலிண்டர் சீறிப்பாய்ந்து சென்றதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். நல்லவேளையாக அப்போது சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மேலும் மற்றொரு சிலிண்டரில் வால்வு வழியாக கசிவு ஏற்பட்டது. உடனடியாக சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் சிவகுமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று, கசிவு ஏற்பட்ட சிலிண்டரை சரிசெய்தனர். மேலும் செவ்வாய்பேட்டை போலீசாரும் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே ராக்கெட்போல சீறிப்பாய்ந்த சிலிண்டரை ஊழியர் ரத்தினசாமி இயக்க முயற்சிப்பதும், சிலிண்டர் வால்வு திறந்து ராக்கெட்போல புகையை கக்கிக்கொண்டு தார்சாலையில் சீறிப்பாய்ந்த காட்சி, வெல்டிங் பட்டறைக்கு அருகில் உள்ள நிறுவனம் ஒன்றின் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. கேமராவில் பதிவான காட்சியை பார்த்த தீயணைப்பு துறையினரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.
சேலம் ரத்தினசாமிபுரத்தில் பெரும்பாலும் தளவாட சாமான்கள், இரும்பு குழாய்கள், ராடுகள், பழைய வீட்டு உபயோகப்பொருட்கள் என சாலையோரமாக போக்குவரத்துக்கு இடையூறாக குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால், எப்போதும் ஆபத்து நிறைந்த பகுதியாகவே அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கருதுகிறார்கள்.
மாநகராட்சி அதிகாரிகள், ரத்தினசாமிபுரம் பகுதியில் ஆய்வு செய்து கடைமுன்பு ஆக்கிரமித்து தளவாட சாமான்கள் போடுவதை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Tags :
Next Story