பஸ் கட்டண உயர்வை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட மாணவ- மாணவிகள் மீது போலீஸ் தடியடி
பஸ் கட்டண உயர்வை கண்டித்து வேலூரில் சாலைமறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவ- மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்,
தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து பல்வேறு கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களும் பல்வேறு போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் வேலூர் ஓட்டேரியில் உள்ள அரசு முத்துரங்கம் கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் காலை 9.15 மணியளவில் வகுப்புகளை புறக்கணித்து விட்டு வெளியேறி ஓட்டேரி சாலைக்கு வந்து திடீரென ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது பஸ் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியதை கண்டித்தும், அந்த கட்டணத்தை திரும்பப் பெறக்கோரியும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த பாகாயம் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தாசில்தார் பாலாஜியும் அலுவலர்களுடன் வந்து, அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அவர்கள் கூறியதை ஏற்காமல் கலெக்டர் இங்கு வர வேண்டும் என கோஷமிட்டவாறே மாணவ, மாணவிகள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
அவர்களிடம் போலீசார் “உங்களது கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கிறோம். மறியலை கைவிடுங்கள்” என அவர் கேட்டுக்கொண்டனர்.
ஆனால் அதனையும் மாணவர்கள் ஏற்கவில்லை. இதனிடையே போராட்டம் காரணமாக வாகன போக்குவரத்து தொரப்பாடி வழியாக மாற்றி விடப்பட்டது. இந்த நிலையில் பகல் 11 மணி அளவில் மாணவர்கள் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தாலுகா குழு உறுப்பினர் ஆறுமுகம் கலந்து கொண்டார். அவர்களிடம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) பாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பாலமதி மலைப்பகுதியில் இருந்து கல்லூரி சாலை வழியாக பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ் மீது தண்ணீர் பாக்கெட்டுகளை போராட்டம் நடந்த இடத்திலிருந்து யாரோ வீசியதாக கூறப்படுகிறது. அந்த தண்ணீர் பாக்கெட்டுகளில் உள்ள தண்ணீர் சிதறி பெண் போலீசார் மீது விழுந்தது.
மாணவர்களிடம் தண்ணீர் பாக்கெட்டுகள் வீசப்பட்டது குறித்து போலீசார் கண்டித்தனர். அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மாணவர்களுக்கு ஆதரவாக தாலுகா குழு உறுப்பினர் ஆறுமுகம் பேசினார். அவரை போராட்ட களத்தில் இருந்து போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது வாக்குவாதம் முற்றியது. மாணவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர்.
ஆனால் அதன்பின்னரும் மறியல் தொடர்ந்ததால் மாணவ, மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனையடுத்து மாணவ- மாணவிகள் நாலாபுறமும் சிதறி ஓடினர். ஒரு சில மாணவர்கள் சாலையில் அமர்ந்து எழ மறுத்தனர். அவர்களை குண்டுக்கட்டாக போலீசார் தூக்கி வெளியேற்றினர்.
தடியடியில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர். மாணவிகளும் பயந்து அருகில் உள்ள கடைகளுக்குள் ஓடிச் சென்றனர். ஆனால் கடைகளுக்கும் புகுந்து அவர்களை போலீசார் வெளியேற்றி விரட்டினர். மாணவர்கள் ஓடியபோது அவர்கள் விட்டுச்சென்ற செருப்புகளும் சாலையில் கிடந்தன. இதனால் அந்த பகுதியே போர்க்களம்போல் காட்சியளித்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவ- மாணவிகள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துச் சென்று ஓடும் போது சிலர் கீழே விழுந்து காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story