நட்சத்திர பிரசார குழுவில் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவுக்கு 6-வது இடம் பா.ஜனதாவில் கடும் அதிருப்தி
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான நட்சத்திர பிரசார குழுவில் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவுக்கு 6-வது இடம் வழங்கப்பட்டு உள்ளதற்கு கர்நாடக பா.ஜனதாவில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
பெங்களூரு,

ஆச்சரியத்தை ஏற்படுத்தியது
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா தொகுதியில் இருந்து 5 முறை எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் அனந்த குமார் ஹெக்டே. இவர் எம்.பி.யாக இருந்தவரை பெரிய அளவுக்கு பிரபலம் இல்லாமல் இருந்தார். கட்சியிலும் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த முறை மத்திய மந்திரிசபை விஸ்தரிக்கப்பட்டபோது, கர்நாடகத்தில் இருந்து ஒருவருக்கு மந்திரி பதவி கிடைப்பது உறுதியானது.
பிரகலாத்ஜோஷி, சுரேஷ் அங்கடி உள்ளிட்டோரின் பெயர்கள் மந்திரி பதவிக்கு அடிபட்டன. ஆனால் கட்சியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அனந்தகுமார் ஹெக்டே மத்திய மந்திரியாக பதவி ஏற்றார். இது கர்நாடக பா.ஜனதாவினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் அதிருப்தியையும் உண்டாக்கியது. இது பிரதமர் மோடி, அமித்ஷாவின் முடிவு என்பதால் இந்த அதிருப்தியை கட்சி நிர்வாகிகள் வெளிக்காட்டவில்லை. இன்முகத்துடனேயே ஏற்றுக்கொண்டனர்.
இந்துத்துவா கொள்கையை...
அனந்தகுமார் ஹெக்டே மத்திய மந்திரியாக பதவி ஏற்ற பிறகு அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கலில் சிக்கினார். சித்தராமையாவை அவர், அவதூறாக விமர்சித்தார். அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என்று அறிவித்தார். இதற்கு கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இறுதியில் அவர் மன்னிப்பு கோரினார். தலித்துகள் பற்றி அவர் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தினார். இதை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன.
சமீபகாலமாக அனந்த குமார் ஹெக்டே, கட்சியின் பொது மேடைகளில் சித்தராமையா மற்றும் காங்கிரசுக்கு எதிராக கர்ஜித்து வருகிறார். இதனால் பா.ஜனதாவில் அவர் முக்கிய தலைவராக உருவெடுத்து வருகிறார். கர்நாடக பா.ஜனதாவில் எடியூரப்பாவுக்கு அடுத்த நிலையில் அனந்தகுமார் ஹெக்டேவை கட்சி மேலிடம் வளர்த்துவிடுவதாக தகவல் வெளியானது. இந்துத்துவா கொள்கையை மிக வலுவாக எடுத்துக்கூறி வரும் அவரை, முதல்-மந்திரி ஆக்கவும் பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் கர்நாடக சட்டசபை தேர்தலில் எடியூரப்பாவை முதல்-மந்திரி வேட்பாளராக அக்கட்சி ஏற்கனவே அறிவித்து உள்ளது.
கடும் அதிருப்தி
இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக பா.ஜனதா சார்பில், நட்சத்திர பிரசார குழு தயார் செய்யப்பட்டுள்ளது. அதற்கான பெயர் பட்டியல் கட்சி மேலிடத்திடம் வழங்கப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகிஆதித்யநாத், எடியூரப்பா, மத்திய மந்திரி அனந்தகுமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அந்த குழுவில் 6-வது இடத்தில் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவின் பெயர் இடம் பெற்று இருக்கிறது.
அவருடைய பெயருக்கு பிறகு மத்திய மந்திரி சதானந்தகவுடா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், மத்திய மந்திரிகள் ரமேஷ் ஜிகஜினகி, சுஷ்மா சுவராஜ், நிர்மலா சீதாராமன் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நட்சத்திர பிரசார குழுவில் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவுக்கு 6-வது இடம் வழங்கப்பட்டு இருப்பதற்கு கர்நாடக பா.ஜனதாவில் கடும் அதிருப்தி எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இந்த பட்டியல் வெளியிடப்படவில்லை. பெயர் வரிசையை மாற்றி அமைக்குமாறு அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள் கட்சி மேலிடத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.

Related Tags :
Next Story