சட்டசபை தேர்தலில், மாவட்டத்திற்கு ஒரு தொகுதியில் பெண் வேட்பாளர்களை களம் இறக்க காங்கிரஸ் முடிவு
சட்டசபை தேர்தலில், மாவட்டத்திற்கு ஒரு தொகுதியில் பெண் வேட்பாளர்களை களம் இறக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்து உள்ளது.
பெங்களூரு,

சட்டசபை தேர்தல்
கர்நாடக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகின்றனர். மேலும் சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிபெரும்பான்மை கிடைக்காது என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளதால் அரசியல் தலைவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
எனவே அனைத்து தொகுதிகளிலும் வலுவான வேட்பாளர்களை நிறுத்த கட்சி மேலிடங்கள் முடிவு செய்து உள்ளன. இதற்காக மக்கள் செல்வாக்கு உள்ள வேட்பாளர்கள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி சில தனியார் நிறுவனத்திடம் அரசியல் கட்சிகள் ஒப்பந்தம் செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பெண்களுக்கு அதிக தொகுதிகள்
இந்த நிலையில் இன்னும் 3 மாதங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட பெண்களுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என கட்சியின் மேலிடத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவி லட்சுமி ஹெப்பால்கர், கட்சியின் மேலிட தலைவர் வேணுகோபாலை சந்தித்து மனுவையும் வழங்கினார்.
இந்த மனு குறித்து வேணுகோபால், தேசிய தலைவர்களிடம் ஆலோசனை நடத்தியதாகவும், இதற்கு சம்மதம் தெரிவித்த கட்சி மேலிடமும் மாநிலத்தில் பெண் வேட்பாளர்கள் வெற்றிபெற சாதகமான தொகுதிகள் குறித்து ஆய்வு நடத்த உத்தரவிட்டது. அதன்படி கர்நாடகத்தில் பெண் வேட்பாளர்கள் வெற்றிபெற சாதகமாக 30 இடங்கள் இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
மாவட்டத்திற்கு ஒரு தொகுதியில்...
இதனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகளிர் அணியினர் தேர்தலில் போட்டியிட தங்களுக்கு சீட் ஒதுக்ககோரி தங்களது கட்சி தலைவர்களை சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர். இதில் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவி லட்சுமி ஹெப்பால்கர், மந்திரிகளான உமாஸ்ரீ, கீதா மகாதேவ பிரசாத், சகுந்தலா ஷெட்டி எம்.எல்.ஏ, போத்தம்மா எம்.எல்.சி. உள்பட 12 பேருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க கட்சியின் மேலிடம் முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மாவட்டத்திற்கு ஒரு தொகுதியில் பெண் வேட்பாளர்களை களம் இறக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்து உள்ளதாக தெரிகிறது. அதன்படி சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரியில் வீனா சந்திரேகவுடா, சிந்தகேவில் மஞ்சுநாத் கோவர்த்தனா, பெலகாவி(தெற்கு) லட்சுமி ஹெப்பால்கர், ஜகலூர் புஷ்பநாயக், விராஜ்பேட்டையில் சரிதா பூனாச்சி, கோலார் தங்கவயலில் ரூபா சசிதர், நெலமங்களாவில் கவிதா ஸ்ரீ ராஜண்ணா, பெங்களூரு (தெற்கு) சுஷ்மா ராஜகோபால ரெட்டி, ஜெயநகரில் சவுமியா ரெட்டி ஆகியோரை நிறுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
2 மந்திரிகளுக்கு மீண்டும் சீட்
இதேபோல் தேரதாலில் மந்திரி உமாஸ்ரீ, குண்டலுபேட்டையில் மந்திரி கீதாமகாதேவ பிரசாத், மடிகேரியில் சந்திரகலா, குமட்டியில் சாரத ஷெட்டி, மூடிகெரேவில் நைனா பொட்டம்மா, ராஜாஜிநகரில் மஞ்சுளா நாயுடு அல்லது முன்னாள் மேயர் பத்மாவதி, பொம்மனஹள்ளியில் கவிதா ரெட்டி, , பாகல்கோட்டையில் கங்கா மேட்டி, சிக்காங்கில் ராஜேஸ்வரி பட்டீல், சிக்கமகளூருவில் காயத்ரி சந்தேகவுடா, பீதர்(தெற்கு) மீனாட்சி சங்கரமட், கடூரில் வனமாலா தேவராஜ், சாகரில் டாக்டர் நந்தினி, சென்னப்பட்டணாவில் சாரதா கவுடா, ஆகியோரை நிறுத்தலாம் என தெரிகிறது.
மேலும் துருவகெரேவில் கீதா ராஜண்ணா, சித்ரதுர்காவில் பாவனா, சிந்தாமணியில் வாணி கிருஷ்ணா ரெட்டி, ஒலேநரசிபுராவில் எஸ்.ஜி.அனுபமா, தாசரஹள்ளியில் ஜெயந்தி, கொள்ளேகாலில் புஷ்பா அமர்நாத் ஆகியோருக்கு கட்சி மேலிடம் போட்டியிட வாய்ப்பளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் 10 பெண் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி களம் இறக்கியது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story