சட்டசபை தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை 3 கட்டமாக வெளியிட பா.ஜனதா முடிவு
சட்டசபை தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை 3 கட்டமாக வெளியிட பா.ஜனதா கட்சி முடிவு செய்து உள்ளது.
பெங்களூரு,

150 தொகுதிகள் இலக்கு
கர்நாடக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் மாதம் இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை தட்டி பறிக்கும் நோக்கில் பா.ஜனதா கட்சியும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதேபோல் ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவர் குமாரசாமியும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.
இந்த தேர்தலில் ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கும் தனிபெரும்பான்மை கிடைக்காது என தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்புகள் வெளியாகி உள்ளது. இதனால் கலக்கம் அடைந்து உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தலில் வலுவான வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்து உள்ளனர். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 150 தொகுதிகளை பிடிக்க பா.ஜனதா கட்சி இலக்கு நிர்ணயித்து உள்ளது.
கடும் இழுபறி
இந்த இலக்கை அடைய பரிவர்த்தனா யாத்திரை என்ற பெயரில் மாநிலம் முழுவதும் அந்த கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் எடியூரப்பா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆனால் பா.ஜனதாவுக்குள் உட்கட்சி பூசல் நிலவி வருவதால் தேர்தல் பணியில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தேர்தலில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நேரடியாக கண்காணித்து வருகிறார்.
மேலும் தேர்தல் பணியின் நிலைகுறித்து கட்சி நிர்வாகிகளை அடிக்கடி அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த முறை மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா தீவிரம் காட்டி வருவதால் அக்கட்சியின் பிரமுகர்கள், முன்னாள் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள்., தங்களுக்கு சீட் ஒதுக்க வேண்டும் என கட்சி தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் வேட்பாளர் பட்டியலை முடிவு செய்வதில் கட்சிக்குள் கடும் இழுபறி நிலவுகிறது.
3 கட்டமாக வெளியிட முடிவு
எனவே நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை 3 கட்டமாக வெளியிட கட்சியின் மேலிடம் முடிவு செய்து உள்ளதாக தெரிகிறது. அதாவது பா.ஜனதா கட்சியில் தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் சிலருக்கு அந்த கட்சி மீண்டும் வாய்ப்பளிக்க முடிவு செய்து உள்ளது. எனவே மீண்டும் வாய்ப்பளிக்கப்பட உள்ள எம்.எல்.ஏ.க்கள், போட்டி அதிகம் இல்லாத தொகுதிகளுக்கு முதற்கட்டமாக வருகிற 15-ந் தேதிக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இதில் சுமார் 70 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதேபோல் குறைந்த போட்டியுள்ள தொகுதிகளுக்கு வருகிற 25-ந் தேதிக்குள்ளாகவும், மீதமுள்ள தொகுதிகளுக்கு மார்ச் மாதம் முதல் வாரத்திற்குள்ளாக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Tags :
Next Story