திருவாரூர் மாவட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்


திருவாரூர் மாவட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2018 4:15 AM IST (Updated: 31 Jan 2018 1:51 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் தொடர்ந்து பணி வழங்க வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

100 நாள் வேலை திட்டத்தில் தொடர்ந்து பணி வழங்க வேண்டும். ஊரக வேலை திட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் உத்தரவை திரும்ப பெற வேண்டும். வேலை வாய்ப்பை இழந்து விவசாய தொழிலாளர்கள் சிரமப்பட்டு வருவதால் 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்த வேண்டும். வேலைக்கான அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் முழுமையான வேலை, கூலி உடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று திருவாரூர் மாவட்டம் முழுவதும் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. இதில் திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமாரராஜா முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் நாகராஜன் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் சாமியப்பன், ஒன்றியக்குழு உறுப்பினர் இடும்பையன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சேகர், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சுபா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் கோசி.மணி, ஒன்றிய நிர்வாகிகள் பக்கிரிசாமி, செல்வராஜ், கலியபெருமாள், சின்னையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோட்டூர்

விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியக்குழு சார்பில் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்து காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு சங்க ஒன்றிய தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். சங்க ஒன்றிய செயலாளர் ரெகுபதி, விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் தொடங்கி வைத்து பேசினர். இதில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நீடாமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். விவசாய சங்க ஒன்றிய தலைவர் பூசாந்திரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சோம.ராஜமாணிக்கம், மாவட்டக்குழு உறுப்பினர் கைலாசம், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க மாவட்ட தலைவர் கலியபெருமாள் பேசினார். இதில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் நாகூரான், நகர செயலாளர் ஜோசப், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் ஜான்கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குடவாசல்

குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய நிர்வாகி மருதவாணன் தலைமை தாங்கினார். சந்திரகாசன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க தலைவர் கலைமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் கெரக்கொரியா, குடவாசல் பகுதி செயலாளர்கள் லட்சுமி (தெற்கு), அன்பழகன் (வடக்கு) ஆகியோர் கலந்து கொண்டனர்.

வலங்கைமான்

வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு சங்க ஒன்றிய தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பாலையா, சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராதா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூத்தாநல்லூர் அருகே உள்ள கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்க ஒன்றிய தலைவர் மருதையன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் மணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர், ஒன்றிய செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கரும்பு விவசாய சங்க மாவட்ட செயலாளர் தம்புசாமி, விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் ஜெயபால், ஒன்றியக்குழு உறுப்பினர் சிவசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கோபிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story