விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த வலியுறுத்தி மார்ச் 23-ந் தேதி டெல்லியில் போராட்டம் அன்னா ஹசாரே பேட்டி
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த வலியுறுத்தி மார்ச் மாதம் 23-ந் தேதி டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறினார்.
பெங்களூரு,

டெல்லியில் போராட்டம்
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே சித்ரதுர்காவில் உள்ள முருகா மடத்திற்கு நேற்று வந்தார். அங்கு மடாதிபதி சிவமூர்த்தி முருகா சுவாமியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அதன் பிறகு அன்னா ஹசாரே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விவசாயிகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமென்றால் விவசாயத்துறைக்கு மத்திய-மாநில அரசுகள் அதிக ஊக்கம் அளிக்க வேண்டும். விவசாயிகளுக்கு வருமானத்திற்கான வழிகளை அரசுகள் தெரிவிக்க வேண்டும். உதவிகளை செய்ய வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த வலியுறுத்தி வருகிற மார்ச் மாதம் 23-ந் தேதி டெல்லியில் நான் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளேன்.
நாடு முன்னேற்றம் அடையும்
அனைத்து தரப்பு மக்களும் சரியான வாழ்க்கையை வாழ அரசியல் சாசனத்தில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விவசாய விளைபொருள் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. அதிகாரிகள் குளுகுளு அறையில் உட்கார்ந்து கொண்டு இருந்தால் எந்த பணியும் நடைபெறாது. விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்க பாடுபட வேண்டும்.
‘ஸ்மார்ட்‘ நகரங்களுக்கு பதிலாக நாம் ‘ஸ்மார்ட்‘ கிராமங்களை உருவாக்க வேண்டியது அவசியம். கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால் நகரங்களும் முன்னேறும். நகரங்கள் வளர்ந்தால் நாடு முன்னேற்றம் அடையும்.
இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.
சித்தகங்கா மடாதிபதி
அதைத்தொடர்ந்து துமகூரு சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசுவாமியை அவர் நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “சித்தகங்கா மடாதிபதி பவ்வேறு சேவைகளை ஆற்றி வருகிறார். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருடைய வாழ்க்கை இந்த சமுதாயத்திற்கு வழிகாட்டியாக உள்ளது. 110 வயதிலும் சமூக சேவை ஆற்றி வருகிறார். இது சாதாரண விஷயம் இல்லை. அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இந்த சமுதாயத்திற்கு சேவையாற்ற வேண்டும்“ என்றார்.

Related Tags :
Next Story